#weaningrecipe
பீட் ரூட் இட்லி
தோல் நீக்கப்பட்ட முழு உளுந்து – 1 கப்
இட்லி அரிசி – 4 கப்
உப்பு – 3 டீ ஸ்பூன்
வெந்தயம் -1/2 டீ ஸ்பூன்
பீட் ரூட் 1
முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் இட்லி அரிசி மற்றும் வெந்தயம் சேர்த்து தண்ணீரில் அலசி 3 மணி நேரம் வரைஊற வைக்கவும். தோல் சீவி பீட்ரூட்டையும் சேர்க்கவும்.
பிறகு மற்றொரு பவுலில் உளுந்து போட்டு அதையும் இதேபோன்று ஊறவைக்கவும்
ஊற வைக்கப்பட்ட உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயத்தை முதலில் கிரைண்டரில் போட்டு அரைக்க வேண்டும்.
பிறகு ஊறவைக்கப்பட்ட அரிசியை கிரைண்டரில் போட்டு சிறிது சிறிதாக நீர் விட்டு நன்கு மாவு பதத்திற்கு அரைக்க வேண்டும்.
பிறகு ஒரு பெரிய பாத்திரத்தில் இரண்டு மாவினை சேர்த்து கைகளால் சேர்த்து கரைத்து 8 மணிநேரம் வரை புளிக்க விடவும். 8 மணிநேரம் கழித்து இட்லி மாவு தயாராகிவிடும்.
பிறகு இட்லி மாவினை உப்பு போட்டு கரைத்து இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து இறக்கினால் சுவையான இட்லி தயார்.
Recommended Articles
BabyChakra User
Super ah irukum pola