#raisingstars
பீட்ரூட் தோசை
தோல் நீக்கப்பட்ட முழு உளுந்து – 1 கப்
இட்லி அரிசி – 4 கப்
உப்பு – 3 டீ ஸ்பூன்
வெந்தயம் -1/2 டீ ஸ்பூன்
அவல் 1/2 டீ ஸ்பூன்
பீட்ரூட் 1
○முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் இட்லி அரிசி மற்றும் வெந்தயம்,அவல்,
○பீட்ரூட் சேர்த்து தண்ணீரில் அலசி 3 மணி நேரம் வரைஊற வைக்கவும். பிறகு மற்றொரு பவுலில் உளுந்து போட்டு அதையும் இதேபோன்று ஊறவைக்கவும்
○ஊற வைக்கப்பட்ட உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயத்தை முதலில் கிரைண்டரில் போட்டு அரைக்க வேண்டும்.
○பிறகு ஊறவைக்கப்பட்ட அரிசியை,அவல், பீட்ரூட் கிரைண்டரில் போட்டு சிறிது சிறிதாக நீர் விட்டு நன்கு மாவு பதத்திற்கு அரைக்க வேண்டும்.
○பிறகு ஒரு பெரிய பாத்திரத்தில் இரண்டு மாவினை சேர்த்து கைகளால் சேர்த்து கரைத்து 8 மணிநேரம் வரை புளிக்க விடவும். 8 மணிநேரம் கழித்து தோசை மாவு தயாராகிவிடும்.
○பிறகு மாவினை உப்பு போட்டு கரைத்து தோசை செய்து உண்ணலாம்.
Recommended Articles