குழந்தைகளுக்கான சத்துமாவு (Homemade Cerelac)

தேவையானவை:

அரிசி – 50 கிராம்

துவரம் பருப்பு – 10 கிராம்

பச்சைப் பயறு – 10 கிராம்

பாசி பருப்பு – 10 கிராம்

உலர்ந்த பட்டாணி – 10 கிராம்

கொண்டைக்கடலை – 10 கிராம்

சீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை:

கொண்டைக்கடலை மற்றும் சீரகத்தை தவிர, மற்ற அனைத்தையும் தனி தனியாக நன்றாக கழுவி தூசி, கல் ஆகியவற்றை நீக்கி கொள்ள வேண்டும்.

நன்றாக தண்ணீரை வடித்துக் கொள்ளுங்கள்.

சுத்தமான வெள்ளைத் துண்டில் இவற்றைப் பரப்பி தனி தனியாக மேற்சொன்ன பொருட்களைக் காய வைக்கவும்.

கழுவியவற்றை நன்றாக 3-4 நாட்களுக்கு வெயிலில் உலர வைக்க வேண்டும்.

நன்றாக வெயிலில் உலர்த்தப்பட்ட பொருட்களை ஒவ்வொரு பொருளாக அரிசி, துவரம் பருப்பு என அனைத்தையும் எடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் அப்படியே வறுத்துக் கொள்ளுங்கள்.

தீய விடாமல் வறுக்க வேண்டும். அருகிலே நின்று கவனமாக வறுக்கவும்.

அரிசியை வறுக்கும்போது அவை லேசாக நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.

பருப்புகளை வறுக்கும்போது, லேசாக பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும்.

இப்போது கொண்டைக்கடலை, சீரகம் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளுங்கள்.

இதன் பிறகு, அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து 2-3 நிமிடங்கள் வறுக்கவும்.

வறுத்த அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

காற்று புகாத, உலர்ந்த டப்பாவில் பாதுகாப்பான முறையில் போட்டு சேமித்து வைக்கலாம்.

1 (அ) 2 ஸ்பூன் மாவை சிறிய பாத்திரத்தில் எடுத்து 2 டம்ளர் நீர் சேர்த்து சிறு தீயில் வேக விடவும், தொடர்ந்து கரண்டியால் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். 5 (அ) 10 நிமிடம் கழித்து இறக்கி ஆற விடவும். ஆறிய பிறகு குழந்தைக்கு ஸ்பூனின் மூலம் குடுக்கலாம். தேவையெனில் சிறிது சர்க்கரை (அ) வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.

குறிப்பு: குழந்தைக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆதாரமாக இருப்பதால், 12 மாதங்கள் மற்றும் அதற்கு அப்பால் தாய்ப்பால் கொடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

மறுப்பு: உங்கள் குழந்தைக்கு உப்பு / சர்க்கரை அறிமுகப்படுத்துவதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகவும்.

#babynutrition #weaningrecipes


8 month baby ku kodukalama

9 month baby ku கொடுக்கலாமா

9 month complete aga pothu itha en boy babyku introduce pannalama mam


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.
Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/141211