#babynutrition
கோவக்காய் பொரியல்
தேவையான பொருள்கள்
கோவக்காய் - அரை கிலோ
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
தேங்காய் - ஒரு சில்லு
காய்ந்த மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 4
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 ஸ்பூன்
தாளிக்க:
கடுகு,உளுந்தம் பருப்பு,கறிவேப்பிலை - தேவையான அளவு
தேங்காய் காய்ந்த மிளகாய் சின்ன வெங்காயம் மூன்றையும் தண்ணீர் சேர்க்காமல் சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
கோவக்காயை நீளமாக நறுச்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளிக்கவும்.
அத்துடன் நீளமாக நறுக்கிய கோவக்காயைச் சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைத்து அடுப்பை 5 நிமிடம் சிம்மில் வைக்கவும்.
கோவக்காய் அரை வேக்காடு வெந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வேகவிடவும்.
பச்சை வாசனை போனவுடன் இறக்கவும். சுவையான கோவக்காய் பொரியல் தயார்.
ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைக்கு உப்பை தவிர்க்கவும்.
Source samayal kurripu
Recommended Articles