#tamilbabychakra

#weaningatarah

#babynutrition

மும்பை மாநகரத்தில் உள்ள இடம் " Sion" நமது தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடமாகும், அதில் ஒரு சின்ன பகுதி தான் " கோலிவடா" மீனவர்கள் வசிக்கும் இடம்மாகும். கோலி என்றால் மீனவர்கள் என்று பொருள். இங்கு தயாரிக்கபடும் மீன் வருவல் மும்பை முழுக்க பேமஸ். இதை மீன் கோலிவடா என்பார்கள், மீன், இரால், சிக்கன் என்று எதை வைத்தும் தயாரிக்கலாம். செய்து பாருங்கள் குழந்தைகளுக்கு பிடிக்கும்.

இரால் கோலிவடா

இரால் − 6−7

மிளகாய் தூள்− 1/2 தே.க

சாட் மசாலா− சிறிது

கடலை மாவு − 2 தே.க

இஞ்சி பூண்டு விழுது − 1 தே.க

தயிர்− 1/2 கப்

உப்பு− சிறிது

ஆயில்− பொறிக்க

இராலை மிளகாய் தூள், சாட் மசாலா, கடலை மாவு இஞ்சி பூண்டு விழுது, தயிர் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும். மெதுவாக எண்ணெய்யில் பொறித்தெடுக்கவும். இரால் கோலிவடா தயார்.

Pic credit: Internet


Yaaruku pidikum era?


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.
Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/142592