பிஸிபேளா பாத்

தேவையானவை:

அரிசி, துவரம் பருப்பு - தலா 1 கப்,

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,

நெய் - 1 டேபிள் ஸ்பூன், கடுகு,

உளுந்து - தலா 1 டீஸ்பூன்,

சின்ன வெங்காயம் - 1 கப்,

தக்காளி - 4,

பச்சைப் பட்டாணி - அரை கப்,

வேகவைத்து வழித்தெடுக்கப்பட்ட முருங்கைக்காய் விழுது - அரை கப்,

புளி - எலுமிச்சை அளவு,

கறிவேப்பிலை - சிறிதளவு,

உப்பு - தேவைக்கு.

அரைக்க:

தனியா - 2 டேபிள் ஸ்பூன்,

மிளகாய் வற்றல் - 8,

கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்,

வெந்தயம் - அரை டீஸ்பூன்,

பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 1,

கசகசா - 2 டீஸ்பூன்,

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

அரிசி, பருப்புடன் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், உப்பு மற்றும் ஆறு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வையுங்கள். இரண்டு விசில் வந்ததும், மிதமான தீயில் பத்து நிமிடங்கள் வைத்து இறக்குங்கள். அரைக்கக் கூறப்பட்டுள்ளவற்றை பொன்னிறமாக வறுத்துப் பொடியுங்கள். புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். எண்ணெய் மற்றும் நெய்யைக் காயவைத்து கடுகு, உளுந்தை தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு தக்காளி, பட்டாணி சேர்த்து வதக்குங்கள். பிறகு புளி கரைசலைச் சேர்த்து, பச்சை வாடை போகக் கொதித்ததும் பொடித்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து, மேலும் இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து முருங்கை விழுதை சேர்த்துக் கிளறி இறக்குங்கள். இதனை வெந்த அரிசி பருப்பு கலவையுடன் கலக்குங்கள்.

படம்: கூகுள்

#tamilinfographics #babynutrition


Romba pidikum


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/142679