தேவையானவை:
உதிராக வடித்த சாதம் - 1 கப்,
வேகவைத்த பச்சைப் பட்டாணி - 1/4 கப்,
உப்பு - தேவைக்கு
அலங்கரிக்க புதினா - தேவைக்கு
அரைக்க:
புதினா
தேங்காய்த்துருவல் - 1/4 கப்
காய்ந்தமிளகாய் - 1
பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிது
பூண்டு - 4 பல்
தாளிக்க:
பட்டை - சிறிய துண்டு
லவங்கம் - 2
நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
மிக்சியில் புதினா, தேங்காய்த்துருவல், காய்ந்தமிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து விழுதாக அரைக்கவும். கடாயில் நெய் ஊற்றி பட்டை, லவங்கம் தாளித்து, அரைத்த விழுது, பட்டாணி சேர்த்து வதக்கி, உப்பு, சாதம் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை நிறுத்தி, புதினாவை தூவி பரிமாறவும்.
படம்: கூகுள்
#tamilinfographics #babynutrition
Recommended Articles
BabyChakra User
Easy food