தேவையானவை:
மாதுளம்பழம் முத்துக்கள் - 1 கப்,
புதினா - 7- 8 இதழ்கள்,
சர்க்கரை அல்லது தேன் - 2 டேபிள் ஸ்பூன்,
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்,
சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்,
ஐஸ்கட்டி - 2-5 தேவையெனில்,
சோடா அல்லது குளிர்ந்த தண்ணீர் - 2 கப்.
அலங்கரிக்க:
புதினா இதழ்கள் - 2,
எலுமிச்சை - 2 Slice.
செய்முறை:
மிக்சியில் மாதுளம்பழம் (முத்துக்கள்), எலுமிச்சை சாறு, புதினா, சீரகப் பொடி, சர்க்கரை ஆகியவற்றை மைய அரைக்கவும். இதை வடிகட்டி, அதில் சோடா அல்லது குளிர்ந்த தண்ணீர் சேர்த்து கலந்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி புதினா, எலுமிச்சை கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.மாதுளம்பழம் நோய் எதிர்ப்புசக்தியை தரக்கூடியது. விட்டமின் `C’ நிறைந்தது. இது இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.
படம்: கூகுள்
#tamilinfographics #babynutrition
Recommended Articles
BabyChakra User
Adengapa