தேவையானவை:
வாழைப்பூ - 1 கப்,
பச்சை மிளகாய் - 3,
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்,
கடலைப்பருப்பு - 1/ கப்,
இட்லி அரிசி - 1 கப்,
உளுந்து - 1/4 கப்,
பல்லாரி - 2,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு.
செய்முறை:
முதலில் அரிசி, உளுந்து, கடலைப்பருப்பை தனியாக ஊற வைத்துக் கழுவி, அரைத்து ஒன்றாக கலக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, அரைத்த மாவில் கொட்டவும். பின் நறுக்கிய வாழைப்பூ, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருபுறமும் லேசாக எண்ணெய் விட்டு, வேக வைத்து சுட்டு எடுக்கவும்.
படம்: கூகுள்
#tamilinfographics #babynutrition
Recommended Articles
BabyChakra User
Vadai thaan theriyum