தேவையானவை:
மட்டன் - 1/4 கிலோ,
தேங்காய்ப்பால் - 2 கப்,
பாஸ்மதி அரிசி - 1½ கப்,
பட்டை - 2 துண்டு,
லவங்கம் - 2, ஏலம் - 1,
பிரிஞ்சி இலை - 2,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2,
தக்காளி - 3,
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
சிகப்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
புதினா, கொத்தமல்லி - கைப்பிடி அளவு,
பச்சைமிளகாய் - 2, உப்பு,
எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை:
அரிசியையும், மட்டனையும் கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெயை காயவைத்து பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளித்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி பச்சைமிளகாய், மட்டனை சேர்த்து வதக்கவும். பின்பு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சைவாசனை போக வதக்கி, பாதியளவு புதினா இலையை சேர்த்து வதக்கி, 1½ கப் தண்ணீர் ஊற்றி மிளகாய்த்தூள் கலந்து மட்டனை 10 நிமிடம் வேகவிடவும். பிறகு தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து கலந்து கொதி வரும்பொழுது அரிசியை போட்டு குக்கரை மூடி விசில் போடவும். விசில் சத்தம் வந்ததும் சிறு தீயில் வைத்து 5 நிமிடம் கழித்து இறக்கி மீதியுள்ள புதினா, கொத்தமல்லியை போட்டு கிளறி பரிமாறவும்.
படம்: கூகுள்
#tamilinfographics #babynutrition
Recommended Articles
BabyChakra User
Yummy