தேவையானவை:
முட்டை - 3,
சிக்கன் கொத்துக் கறி மசாலா - 100 கிராம்,
ஆனியன் - 50 கிராம்,
பச்சை மிளகாய் - 1,
மிளகுத்தூள் - 5 கிராம்,
உப்பு - தேவைக்கு.
செய்முறை
முட்டையில் வெங்காயம், பச்சை மிளகாய், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். சிக்கனை எலும்பு நீக்கி அதை மிக்சியில் சேர்த்து கீமா போல் செய்து கொள்ளவும். கடாயில் எண்ணை சேர்த்து அதில் இரண்டு முட்டை சேர்த்து அதனுடன் சிக்கன் கொத்துக் கறியை சேர்த்து மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு போட்டு நன்றாக வதக்கவும். சிக்கன் முட்டையுடன் சேர்ந்து நன்றாக வெந்தவுடன் அதனை தனியாக எடுத்து வைக்கவும். தவாவில் எண்ணை சேர்த்து அதில் அடித்து வைத்துள்ள முட்டையை ஆம்லெட் போல் சேர்த்து அதன் மேல் சிக்கன் கொத்துக் கறி மசாலாவை சேர்த்து நன்கு பரப்பி விடவும். பிறகு முட்டையை இரண்டு பக்கம் வேகவிட்டு சூடாக பரிமாறவும்.
படம்: கூகுள்
#tamilinfographics #babynutrition
Recommended Articles
BabyChakra User
Awesome