தேவையானவை:
மக்ரோனி - 200 கிராம்
முட்டை - 2
தக்காளி - 1
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
வெங்காயத்தாள் - 2
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 2 பல்
சோம்பு - ஒரு தேக்கரண்டி (பொடி)
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
முதலில் வெக்காயம் தக்காளி, இஞ்சி, பூண்டு, வெங்காயத்தாள் அகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவேண்டும், பிறகு பச்சை மிளாகாயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி ஒரு தேக்கரண்டி மிளகு, சிறிது உப்பு சேர்த்து அடித்து வைக்கவேண்டும். பிறகு காடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முட்டையை ஊற்றி பிறகு நன்கு கிளறிவிட்டு தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.பின்னர் மக்ரோனியை ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பதமாக வேகவைத்து இறக்கவேண்டும். வெந்த பின் குளிர்ந்த நீர் விட்டு அலசி வைக்கவேண்டும்.பிறகு கடாயில் எண்ணெய் விட்டு பொடித்த ஏலக்காய், பட்டை, லவங்கம், சோம்பு சேர்த்து பின் வெங்காயம் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி, வெங்காயத்தாள் சேர்த்து வதக்கவேண்டும். நன்கு வதங்கிய பின் தண்ணீர், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவேண்டும். நன்கு கொதித்து காய்கள் வெந்ததும் மக்ரோனி சேர்த்து கிளறவேண்டும். தண்ணீர் முற்றிலுமாக சுண்டியதும் முட்டை கலவை சேர்த்து கொத்தமல்லி சேர்த்து பரிமாறலாம். சுவையான முட்டை மக்ரோனி தயார்.
படம்: கூகுள்
#tamilinfographics #babynutrition
Recommended Articles
BabyChakra User
Yummy