தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - 4 கப்
தேங்காய் துருவல் - 1 1/2 கப்
பச்சை மிளகாய் நறுக்கியது - தேவையான அளவு
கொத்தமல்லி நறுக்கியது - 1 கப்
வெங்காயம் - நறுக்கியது - 1 1/2 கப்
சீரகம் - 2 டீஸ்பூன்
கேரட் அல்லது அவரைக்காய் அல்லது பீன்ஸ் - நறுக்கியது 1/2 கப்சமையல் எண்ணெய் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
அரிசிமாவுடன் 1/2 கப் சமையல் எண்ணெய், தேங்காய்த் துருவல், பச்சைமிளகாய், கொத்தமல்லி, வெங்காயம், சீரகம், உப்பு மற்றும் மேலே குறிப்பிட்ட காய்கறிகளில் ஒன்றைச் சேர்த்து சப்பாத்தி மாவுப் போல பிசைந்துகொள்ளவும்.
அதைச் சிறு சிறு உருண்டைகளாக்கி, தோசைக் கல்லின் மேல் அடை போன்று தட்டி எண்ணெய் ஊற்றி சுடவும்.
சுடும்போது, ரொட்டியின் நடுவில் சிறு சிறு துளைகள் போடவும். ரொட்டி நன்றாக வேக இது உதவும். இதை உங்களுக்கு விருப்பமான சட்னியுடன் சேர்த்து சாப்பிடவும்.
படம் : கூகுள்
#tamilinfographics #babynutrition
Recommended Articles
BabyChakra User
Love this oa