தேவையானவை:
இட்லி அரிசி – 1 கப் (400 கிராம்)
உளுந்து – ¼ கப் (100 கிராம்)
எண்ணெய் – 25 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
செய்முறை:
ஆனியன் தோசை (Onion Dosai) செய்முறை:
இட்லி அரிசி, உளுந்து. இதை தனித்தனியாக ஊற வைக்கவேண்டும்
இட்லி அரிசியை நன்றாக ( வழுவழுப்பாக ஆக கூடாது) அரைக்கவும். பிறகு உளுந்தை பொங்கும் வரை நன்றாக அரைக்கவும்.
உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும். பிறகு 6 மணி நேரத்தில் தோசை மாவு தயார் ஆகும்.
சின்ன வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும். இது இரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மை கொண்டது.
தோசை கல் சூடான பிறகு தோசை மாவை மொந்தையாக ஊற்ற வேண்டும்.
அதன் மேல் வெங்காயத்தை போட்டு சுற்றி எண்ணெய் ஊற்ற வேண்டும். பிறகு புரட்டி போட்டு எண்ணெய் ஊற்ற வேண்டும்.
ஆனியன் தோசை ரெடியாகிவிட்டது. இதற்கு சட்னி, சாம்பார் வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
படம் : கூகுள்
#tamilinfographics #babynutrition
Recommended Articles
BabyChakra User
Yummy super