தேவையானவை:
தோசை மாவு – 1 கப்
ஆனியன் – தேவையான அளவு
முட்டை – தேவையான அளவு
மிளகு சீரகம் பொடி – 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணைய் – தேவையான அளவு
செய்முறை:
முட்டை தோசை (Muttai Dosai) செய்முறை:
இட்லி அரிசி, உளுந்து இதை தனித்தனியாக ஊற வைக்க வேண்டும்.
இட்லி அரிசியை நன்றாக (வழுவழுப்பாக ஆகக் கூடாது) அரைக்கவும். பிறகு உளுந்தை பொங்கும்வரை நன்றாக அரைக்கவும்.
உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். பிறகு 6 மணி நேரத்தில் தோசை மாவு தயாராகும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளவும். அதில் ஆனியன் தேவையான அளவு போடவும்.
அதில் மிளகு சீரகம் பொடியைப் போட்டு உப்பையும் போட்டுக் கலக்கவும்.
தோசைக்கல்லில் தோசை மாவை பரவலாக ஊற்ற வேண்டும். அதன் மேல் முட்டை கலவையை ஊற்ற வேண்டும்.
ஒரு கரண்டியை வைத்து வட்டமாக தோசை மேலே பரப்பவும்.
மேலே மிளகு சீரகப்பொடியை தூவ வேண்டும். அதைச் சுற்றி எண்ணையை ஊற்ற வேண்டும்.
பிறகு திருப்பி போட்டு எண்ணையை சுற்றி ஊற்ற வேண்டும்.
பிறகு ஒரு தட்டில் எடுத்து பரிமாறலாம். அறுமையான முட்டை தோசை தயாராகி விடும்.
படம் : கூகுள்
#tamilinfographics #babynutrition
Recommended Articles
BabyChakra User
Super