#raisingstars
#bbccreatorsclub
வேர்க்கடலை குழம்பு
தேவையானவை: பச்சை வேர்க் கடலை - 100 கிராம், காய்ந்த மிளகாய் - ஒன்று, கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், புளி - எலுமிச்சைப் பழ அளவு, கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வேர்க்கடலையை 2 மணி நேரம் ஊறவைத்து, வாணலியில் சிறிது நேரம் வேகவைக்கவும். வாணலி யில் எண்ணெய் விட்டு, கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், வெந்தயம், கடலைப்பருப்பு தாளித்து... சாம்பார் பொடி சேர்த்து வறுத்து, புளியைக் கரைத்து ஊற்றி உப்பு சேர்க்கவும். இதனுடன் வேகவைத்த வேர்க்கடலையை சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும்.
குறிப்பு: சுட்ட அப்பளம், தயிர் பச்சடி இதற்கு சிறந்த காம்பினேஷன்.
Source vikatan
Recommended Articles