தேவையானவை:
கடலைமாவு – 1 கப் (200கி)
அரிசி மாவு – 2 டீஸ்பூன்
பெருங்காயம் – ½ டீஸ்பூன்
ஓமம் – 2 டீஸ்பூன்
கருவேப்பில்லை – சிறிதளவு
நிலக்கடைலைபருப்பு – 50கி
உப்பு, எண்ணெய் – 200ml
செய்முறை:
ஓமத்தை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசிமாவு, பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும்.
ஓமம் தண்ணீர் ஆரிய பிறகு சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய்யை ஊற்றி சூடான, பிறகு மாவை இடியாப்ப உழக்கில் வைத்து, எண்ணெயில் பிழிய வேண்டும்.
புரட்டி போட்டு வேக வைத்து எடுத்தால், சுவையான ஒமப்பொடி தயார்.
படம்: கூகுள்
#babynutrition
Recommended Articles