தேவையானவை:
முட்டை – 1
மிளகு சீரகப்பொடி – 1 ஸ்பூன்
உப்பு – ½ ஸ்பூன்
எண்ணெய் – 1 ½ ஸ்பூன்
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து வைத்துக் கொள்ளவும்.
அதில் மிளகு சீரகப்பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.
பணியாரக் குழியில் முக்கால் குழி அளவிற்கு கலந்து வைத்துள்ள, முட்டையை இரண்டு குழிகள் ஊற்ற வேண்டும். அக்குழியை சுற்றி எண்ணெய் விடவும்.
முட்டை பாதி வெந்தவுடன், ஒரு குழி முட்டையை, மற்றொது குழி முட்டைமேல் போட்டு விட வேண்டும்.
அதை பந்து போல எல்லா பக்கமும் புரட்டி போட்டு வேக வைக்கவும்.
அதனை தனியாக கரைத்து வைத்துள்ள முட்டையில் போட்டு, புரட்டி மறுபடியும் பணியாரக் குழியில் வேக விடவும்.
நன்றாக பந்து போல் வெந்தவுடன் எடுத்து விடவும்.
இதனை மிதமாக சூட்டில் செய்வது நல்லது. பஞ்சு போன்ற கரண்டி ஆம்லெட் ரெடி.
படம்: கூகுள்
#babynutrition
Recommended Articles