தேவையானவை:
பச்சரிசி – 1 கப் (100 கிராம்)
இட்லி அரிசி – 1 கப் (100 கிராம்)
உளுந்து – ¼ கப் (25 கிராம்)
வெந்தயம் – ஒரு கரண்டி (20 p)
சமையல் சோடா – ¼ டீஸ் பூன்
கருப்பட்டி – 250 கிராம்
நெய் (அ) எண்ணெய் – 50 கிராம்
செய்முறை:
பச்சரிசி, இட்லிமாவு, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் 2 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
அதை சிறிது கட்டியாக இருக்குமாறு நெறுநெறு என்று அரைத்துக் கொள்ளவும். சிறிது கட்டியாக மாவு இருந்தால் மிகவும் நல்லது.
அதை 6 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.
கருப்பட்டியை எடுத்து சிறு சிறு துண்டாக தட்டி எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு (1/4 டம்ளர்) தண்ணீர் ஊற்ற வேண்டும்.
கருப்பட்டி கட்டிகள் இல்லாமல் கரையும் வரை காய்ச்ச வேண்டும். பாகு இறுகி விடாமல் இறக்கி விட வேண்டும்.
பின்பு தயார் செய்து வைத்துள்ள மாவு கலவையில் பாகுவை வடிகட்டி ஊற்ற வேண்டும்.
இப்பொழுது பணியார மாவு கலவை தயார் ஆகிவிடும். அதில் சிறிது சமையல் சோடா போட வேண்டும்.
பனியார சட்டியில் நெய் (அ) நல்லெண்ணெய் ஆயில் எடுத்து சட்டியில் தடவி விட்டு மாவை ஊற்றி எண்ணைய்யை சுற்றி ஊற்ற வேண்டும்.
அதன் மேல் ஒரு தட்டை வைத்து மூடிவிட வேண்டும்.
ஒரு சில துளிகள் கழித்து பனியாரத்தை பிரட்டி போட வேண்டும். பின்பு தட்டில் வைத்து பனியாரத்தை சாப்பிடலாம்.
நீங்கள் விரும்பிய பனியாரம் தயார்.
இதை சர்க்கரை நோய் உடையவர்களும் சாப்பிடலாம். கருப்பட்டியில் சர்க்கரை கிடையாது. இது உடம்பிற்கு நல்லது.
படம்: கூகுள்
#babynutrition
Recommended Articles