#raisingstars
#bbccreatorsclub
பலாக்கொட்டை சாம்பார்
தேவையானவை: பலாக்கொட்டை - 10, புளி - நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், துவரம்பருப்பு - 100 கிராம், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். பலாக்கொட்டையை நசுக்கி, மேலே உள்ள தோலை உரித்து, வேகவைத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து வாணலியில் ஊற்றி.. சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, வேகவைத்த பலாக்கொட்டை, துவரம்பருப்பையும் சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்த்து இறக்கவும்.
Source vikatan
Recommended Articles