#tamilbabychakra
#bbccreatorclub
#raisingstars
வெஜ் பனீர் ஊத்தப்பம்
தேவையானவை இட்லி மாவு - 2 கப், துருவிய கேரட், முட்டைகோஸ், பனீர் கலவை - ஒரு கப், வெங்காயம் - ஒன்று (நறுக்கியது), மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை கடாயில் எண்ணெய் விட்டு... துருவிய காய்கறி-பனீர் கலவை, வெங்காயம், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு என எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை இட்லி மாவில் சேர்த்து நன்கு கலக்கவும். தவாவில் சின்ன ஊத்தப்பம் போல் ஊற்றி, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
காய்கறிக்குப் பதில் பொடியாக நறுக்கிய கீரை சேர்த்தும் செய்யலாம்.
Source விகடன்
Recommended Articles