#tamilbabychakra
#bbccreatorclub
#raisingstars
பனீர் பராத்தா
தேவையானவை கோதுமை மாவு - ஒரு கப், துருவிய பனீர் - அரை கப், வெங்காயம் - ஒன்று (நறுக்கியது), கரம் மசாலாத்தூள், சீரகம் - தலா கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை கோதுமை மாவுடன் துருவிய பனீர், பொடியாக நறுக்கிய வெங்காயம், கரம் மசாலாத்தூள், சீரகம், உப்பு சேர்த்து நன்கு பிசையவும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி, சப்பாத்திகளாக தேய்த்து, தவாவில் போட்டு சுட்டு எடுக்கவும். சுட்டெடுத்த சப்பாத்திகளின் மீது எண்ணெய் அல்லது நெய் அல்லது வெண்ணெய் தடவி வைத்தால், மிருதுவாக இருக்கும்.
Source விகடன்
Recommended Articles