#tamilbabychakra
#bbccreatorclub
#raisingstars
பனீர்-சென்னா புலாவ்
தேவையானவை அரிசி - ஒரு கப், வெள்ளை கொண்டைக்கடலை - கால் கப், பனீர் - 100 கிராம், தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று (நறுக்கியது), கீறிய பச்சை மிளகாய் - 3, பட்டை - சிறிய துண்டு, சோம்பு - கால் டீஸ்பூன், கிராம்பு, ஏலக்காய் - தலா இரண்டு, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை கொண்டைக்கடலையை ஊற வைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு... பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளித்து... வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கியதும், கீறிய பச்சை மிளகாய் சேர்க்கவும். ஊற வைத்த கொண்டைக்கடலை, அரிசி, பனீர் துண்டுகள், உப்பு சேர்த்து மீண்டும் நன்கு கிளறவும். தண்ணீர் விட்டு, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும், அடுப்பை 10 நிமிடம் 'சிம்'மில் வைத்து இறக்கவும். ஆறியதும் திறந்து புதினா, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.
Source விகடன்
Recommended Articles