#tamilbabychakra
#bbccreatorclub
#raisingstars
சம்பா கோதுமை கிச்சடி
தேவையானவை சம்பா கோதுமை ரவை - 2 கப், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், குடமிளகாய் கலவை - ஒரு கப், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (நறுக்கியது), கீறிய பச்சை மிளகாய் - 4, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், சோம்பு - கால் டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, பிரிஞ்சி இலை - ஒன்று, புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய், நெய் - தேவையான அளவு.
செய்முறை வெறும் கடாயில் கோதுமை ரவையை வறுத்துக் கொள்ளவும். காற்கறிகளை ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... பட்டை, பிரிஞ்சி இலை, சோம்பு தாளித்து, தக்காளி, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுது, வேக வைத்த காய்கறிகள், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மீண்டும் கிளறியதும், தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் மிதமான தீயில் அடுப்பை வைத்து, வறுத்த ரவையை சேர்த்துக் கிளறவும். எல்லாம் சேர்ந்து ஒன்றாகக் கலந்து வெந்ததும், சிறிது நெய் விட்டு புதினா, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
Source விகடன்
Recommended Articles