#tamilbabychakra
#bbccreatorclub
#raisingstars
கத்திரிக்காய் ரைஸ்
தேவையானவை சாதம் - 2 கப், பிஞ்சுக் கத்திரிக்காய் - 200 கிராம் (நறுக்கியது), மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், , கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய், நெய் - தேவையான அளவு.
செய்முறை கடாயில் நெய், எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை தாளிக்கவும். இஞ்சித் துருவல், கத்திரிக்காய் சேர்த்து, கரம் மசாலாத்தூள் தவிர, மற்ற எல்லாத் தூள்களையும் சேர்த்துக் கிளறி வேக விடவும். பாதியளவு வெந்ததும் உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து, வேக விட்டு, மணம் வந்ததும்... சாதம் சேர்த்துக் கிளறவும். இதனுடன் சிறிதளவு நெய் சேர்த்து இறக்கவும்.
Source விகடன்
Recommended Articles
BabyChakra User
Love this