#babynutrition

#tamilbabychakra

#bbccreatorclub

#raisingstars

உருளைக்கிழங்கு புலாவ்

தேவையானவை பாசுமதி அரிசி - 2 கப், உருளைக்கிழங்கு - கால் கிலோ (நறுக்கியது), இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (நறுக்கியது), கீறிய பச்சை மிளகாய் - 4, பட்டை - ஒரு சிறிய துண்டு, கிராம்பு - 2, ஏலக்காய் - ஒன்று, பிரிஞ்சி இலை ( சிறியது) - 1 புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, சோம்பு - கால் டீஸ்பூன், தேங்காய்ப் பால் - ஒரு கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை அரிசியைக் கழுவி தண்ணீரை வடித்துத் தனியே வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு... பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, சோம்பு தாளிக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, உருளைக்கிழங்கை சேர்க்கவும். இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தேங்காய்ப் பால், தண்ணீர் (சிறிதளவு), உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். கொதித்து வரும்போது, அரிசி சேர்த்து, குக்கரை மூடி, ஒரு விசில் வந்தவுடன், அடுப்பை 10 நிமிடம் 'சிம்'மில் வைத்து இறக்கினால்... உருளைக்கிழங்கு புலாவ் தயார்! புதினா, கொத்தமல்லி தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

Source விகடன்


Awesome yummy


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/145062