குழந்தைக்கு ஒரு வருடம் வரை தாய்ப்பால் மிகவும் முக்கியம். எனது டாக்டர் கண்டிபாக தாய்ப்பால் தரும்வரை கால்ஷியம் (calcium tablet) மருந்தை தினமும் சாப்பிடவேண்டும் என்று அறிவுரை கூறினார். WHO (WORLD HEALTH ORGANIZATION) பரிந்துரையின் படி ரெண்டு வயது வரை சத்துள்ள உணவுடன் தாய்ப்பால் தர வேண்டும்.
பால் மறக்க வைக்க வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும்?
1. பால் தருவதை 4, 3, 2,1 வேளை ஆக குறைக்க வேண்டும்
2. பால் கற்றும் போல் இருந்தால் 1 இல்ல 2 தடவை எடுத்து விட்டால் போதும்
3. முழுமையாக பால் குழந்தைக்கு தருவதை நிறுத்திவிட்ட பிறகு, முட்டைகோஸ் இதழ்களை சிறிது நேரம் freeze செய்து மார்பில் நன்றாக/இறுக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். 3 மணி நேரம் கழித்து முட்டைகோஸ் இதழ்களை மாற்ற வேண்டும். இவ்வாறு செய்தால் பால் சுரப்பதை குறைய வைக்கும். நான் தொடர்ந்து 10 நாள் செய்து வந்தேன். பால் சுரப்பது முழுமையாக நின்றுவிட்டது. முட்டைகோஸ் இதழ்களை இவ்வாறு பயன்படுத்தும் பொழுது, சிறிது அரிப்புத்தன்மை ஏற்படலாம்; இது இயல்பு தான். காச்சல் / அக்குள் வலி (armpit pain) ஏதேனும் இருந்தால் மருத்துவரை பார்க்கவும்.
4. தாய்ப்பாலை நிறுத்தும் பொழுது குழந்தைகள் ஏங்குவது இயல்பு (specifically during sleep). நீங்க ரொம்ப பொறுமையாக இருக்கவேண்டும். அதிகபட்சம் 1 வாரம் வரை அழுகை இருக்கும்.
நீங்க கேட்கலாம் ஏன் மருந்து எடுத்துக்கல தாய்ப்பால் சுரப்பதை நிறுத்தனு?
1. பொதுவாக பால் சுரப்பு ஒரு வருடத்திற்கு பிறகு குறையும். டாக்டரிடம் கேட்டேன் - பால் சுரப்பது குறைந்து இருத்தால் மருந்து தேவையில்லை என்றார்.
2. நான் பல சக தாய்மார்கள்ளிடம் கேட்டேன் அவர்கள் சொன்னதும் இதுவே.
3. பக்க விளைவுகளை சந்திக்க நேரிடாது.
முழுமையாக 10 நாட்கள் இவ்வாறு செய்யுங்கள். இது பலன் தரவில்லை என்றால் டாக்டரை அணுகவும்.
நீங்களும் உங்கள் கணவரும் சேர்ந்தே இந்த சாவலை எதிர்கொள்ளலாம். #weaning #homeremedies
BabyChakra User
narrayani raman Priya Hari Haran Gayathri Hemalatha Arunkumar raji திவ்யாஹரி ஹர்ஷித் Veera Ramya Sowmiya Prabu swetha subaaa Ramya Veerasingam Gopeka Sowbarnik varnika sundar raji ANCY FELIX
Recommended Articles
BabyChakra User
Revauthi rajamani Rebecca Prakash priya dharshini S Z rampriya Suga Priya V
உங்க அனுபவத்தை கொஞ்சம் சொல்லுங்க