தாய்ப்பால் கொடுக்கும்போது வலி ஏற்படுவது ஏன்? தடுப்பது எப்படி?

பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால்தான் சிறந்த மருந்து. காரணம் இயற்கையிலேயே அதில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. தொடர்ந்து தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு நோய்கள் வராது என்பது மருத்துவர்கள் கூறும் உண்மை.;

தாய் குழந்தைக்குத் தாய்ப்பால் தருவது அவருக்கும் நல்லது. குழந்தைக்கும் நல்லது. ஒரு பெண் கர்ப்பம் தரிக்கும்போதே தாய்க்கும், குழந்தைக்குமான உறவு தொடங்கிவிடுகிறது. எனவே, பல்வேறு மருத்துவ நன்மைகளைக் கொண்ட தாய்ப்பாலை குழந்தைக்குக் கொடுக்காவிட்டால்;உடல் ரீதியாகத் தாய்க்கு சில பிரச்னைகள் ஏற்படும்.;

சில பெண்களுக்குத்;தாய்ப்பால் கொடுக்கும்போது பால் கட்டுதல், வலி ஏற்படுதல்,;பால் சுரப்பதில் சிக்கல்கள்உருவாகின்றன. இது ஏன். இதைத் தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து மகளிர், மகப்பேறு நல மருத்துவர் மீனாவிடம் பேசினோம்.

Sponsored

``குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் ஒரு தாய், அதுபற்றிய அனைத்துத்;தகவல்களையும்;தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதனால் என்னென்ன பிரச்னைகள் வரும், வந்தால் அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் குழந்தையை எப்படியெல்லாம் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும். பால் கொடுக்கும்போது, எந்தக் காரணத்துக்காகவும் பால் சுரப்பை இடையில் நிறுத்திவிடக் கூடாது. அப்படித்;திடீரென நிறுத்தும்போது `தாய்ப்பால் கட்டு' பிரச்னையை ஏற்படுத்தும்.;மார்பகத்தின் உள்ளே கெட்டியாகக் கட்டியிருக்கும் இந்தப் பால், மார்புக்காம்பின் சுற்றுப் பகுதிகளைப்;பாதிக்கத் தொடங்கும்.;

தாய்ப்பால் கட்டு ஏற்படுவது ஏன்?

* `குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்' என்ற எண்ணம் தோன்றும் தாய்மார்களுக்குத்தான் பால் சுரப்பு இருக்கும். மற்றவர்களுக்குச் சுரக்காமலேயே போகக்கூடும். அப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்கள், தொடர்ச்சியாக சில தினங்களுக்குக் குழந்தைக்குப் பால் கொடுக்காமலேயே இருந்தால் `தாய்ப்பால் கட்டு' பிரச்னை தீவிரமாகும்.

* முதல்நிலையில், மார்பகத்தில் வலியுடன் லேசான காய்ச்சல் ஏற்படும். அப்படிக் காய்ச்சல் வந்தவர்கள் உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும்.;

* கர்ப்பக் காலத்துக்குப் பிறகு, தவிர்க்கமுடியாத காரணங்களால் (குழந்தை இறந்து பிறப்பது, குறைப்பிரசவத்தில் பிறப்பது) குழந்தைக்குத்; தாய்ப்பால் கொடுக்காமலேயே இருந்தால், தாய்ப்பால் கட்டு ஏற்படும். இதற்கு மருத்துவ ஆலோசனை அவசியம்.

* பால் கொடுக்கும்போது, குழந்தையைச் சரியான நிலையில் வைக்கவில்லை என்றால் குழந்தை பால் குடிப்பதை நிறுத்திவிடக்கூடும். அப்படிப்பட்டச் சூழலில்,;குழந்தைக்குப்; பசி அடங்கிவிட்டதாக எண்ணி;பால் கொடுப்பதை நிறுத்தக் கூடாது. அப்படி நிறுத்திவிட்டால் மார்பின் உள்ளேயே பால் தேங்கிப் பிரச்னை உண்டாகும்.

* பால் கொடுக்காத நேரங்களில், மிகவும் இறுக்கமான ஆடை மற்றும் உள்ளாடை அணிவதாலும்;தாய்ப்பால் கட்டு ஏற்படலாம்.;இதன் பாதிப்புகள் குழந்தைக்குப் பால் கொடுக்கும்போதுதான்;தெரியத் தொடங்கும்.

* பால் புகட்டும்போது, போதிய அளவுக்குக் கொடுக்காமல்;பாதியிலேயே நிறுத்தினாலும் தாய்ப்பால் கட்டு ஏற்படும்.

*;அதீத மனஅழுத்தமும்;ஒரு காரணம்.;

`தாய்ப்பால் கட்டு' பிரச்னை ஏற்பட்ட தாய்மார்களுக்கு மார்பகம் முழுக்க வலி உணர்வு ஏற்படும். அந்த வலி, தாய்ப்பால் தருவது மீதான அதிருப்தியைத் தரக்கூடும். `குழந்தைக்குப் பால் தருவதால் தானே வலி எடுக்கிறது, தராமல் இருந்து பார்க்கலாம்' என்றும் அவர்களை எண்ண வைக்கும். அப்படியான செய்கைகள் பிரச்னையை அதிகப்படுத்துமே தவிர குறைக்காது. எனவே, தாமதப்படுத்தாமல் மருத்துவரை உடனடியாக அணுகி, ஆலோசனை பெறவும்.தாய்மார்கள் கவனத்துக்கு...

தாய்ப்பால் கட்டுப் பிரச்னையைக் கவனிக்காமல் விடுவது, பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தலாம். எனவே பால் கட்டாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.;

பால் கொடுக்கும்போது குழந்தை குடிக்கவில்லை என்றாலும், பாலை வெளியேற்றுவதை நிறுத்திவிடவேண்டாம்.;பால் கொடுக்கும்போது வலி ஏற்படுகிறது என்பவர்கள், `நிப்பிள் ஷீல்ட்' (Nipple Shield) மூலம் பால் கொடுக்கலாம்.;

பால் கொடுக்கும்போது,;குழந்தை சரியான நிலையில்தான் இருக்கிறதா;என அடிக்கடி பாருங்கள். பால் குழந்தையின் மூக்கில் ஏறி மூச்சுத்திணறல் ஏற்படலாம். பிறகு, குழந்தை பால் குடிப்பதையே நிறுத்தக்கூடும். குழந்தையின் வாய்ப் பகுதி;பால் சுரக்கும்பகுதியில் நன்கு பதிந்திருக்க வேண்டும். கீழ்தாடை, தாயின் மார்போடு ஒட்டியிருக்கவேண்டும். குழந்தையின் வாய்ப்பகுதி, மார்புக்காம்பு பகுதியை முழுமையாகக்;கவ்வி இருக்கவேண்டும். நுனிப்பகுதியை மட்டும் கவ்வியிருந்தால் `க்ராக்டு;நிப்பிள்' (Cracked Nipple) என்ற பிரச்னை தாய்க்கு ஏற்படும். அப்போது ஏற்படும் வலி காரணமாக, பால் சுரக்காது. பால் மார்புக்குள்ளேயேக் கட்டிக்கொள்ளும். எனவே, குழந்தையைச் சரியான நிலையில் அமரவைத்து முறையாகப் பால் கொடுக்கவேண்டும். குழந்தையை மார்போடு அணைத்துக் கொள்ளவேண்டும். இப்படியான செய்கைகள்,;தாய், குழந்தையை மனதளவில் இன்னும் நெருக்கமாக்கும்.;

சில தாய்மார்களுக்கு, மார்பின் இரண்டு பக்கமும் ஒரே நேரத்தில் பால் சுரக்கும். அது அவர்களின் அதிகப்படியான பால் இருப்பைக் காட்டுவதுதான். இதற்காகப்;பயப்படத் தேவையில்லை. எப்போதுமே;இரண்டு பக்கமும் பால் கொடுத்துப் பழகுவது சிறந்தது. முதல் மார்பில் சுரக்கும் பாலில் புரதம் அதிகம் இருக்கும். மற்றொரு மார்பில், நீர்ச்சத்து அதிகம் இருக்கும்.

ஒரு மார்பில் குழந்தை பால் குடித்துக்கொண்டிருக்கும்போதே, மற்றொரு மார்புக்கு மாற்றிவிட வேண்டாம். ஒரு காம்பில் பால் சுரந்து முடிந்தபிறகு, மற்றொரு பக்கம் மாற்றவும். ஒருவேளை, குழந்தை முதல் மார்பில் பால் குடிக்கும்போது தூங்கிவிட்டால், விழித்தபின் மற்றொரு பக்கம் கொடுக்கவும்.;

எனவே, பால் கொடுக்கக் கொடுக்க, அதைக் குழந்தை குடிக்கக் குடிக்க பாலின் சுரப்பு சீராகும். அதேபோல `பால் கொடுக்க வேண்டும்' என்ற எண்ணம் தாய்க்கு இருந்தால்தான் தேவையான அளவு பால் சுரக்கும். குழந்தைப்;பிறந்து முதல் சில நாள்களுக்கு, தாய்மார்களுக்கு `தாய்ப்பால் கட்டு' பாதிப்புகள் ஏற்படுவது இயல்புதான். முடிந்தவரை அப்படியான சூழல் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது. ஒருவேளை ஏற்பட்டாலும், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும். இதுதவிர கீழ்க்காணும் அறிகுறிகள் இருந்தால்;உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்.

அறிகுறிகள்:

* மிதமான காய்ச்சல்

* சரியான நேரத்தில், தேவையான அளவு பால் வராமலிருப்பது

* மார்பு அழுத்தப்படுவது போன்ற உணர்வு

* மார்பின் குறிப்பிட்ட ஏதாவதொரு பகுதியில் வலி எடுப்பது

* மார்பில் சிறிதான கட்டிக் காணப்படுவது,

* மார்புப்பகுதி சிவந்து காணப்படுவது;

தாய்ப்பால் கொடுக்கும்போது, `ஆக்ஸிடோஸின்';ஹார்மோன் (Oxytocin Hormone) அதிகம் சுரக்கும். கர்ப்ப காலத்தில் விரிந்திருந்த கர்ப்பப்பை, சுருங்கும். பிரசவத்தின்போது ஏற்பட்ட ஹார்மோன் மாற்றங்கள் யாவும் சரியாகத் தொடங்கும். எனவே, தாய்மார்கள் எந்தச் சூழலிலும் பால் கொடுப்பதைத் தவிர்க்கக் கூடாது.

குறிப்பாக, மார்பைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மார்புப்பகுதியில் ஏதேனும் தொற்று ஏற்பட்டால், தாய், சேய் இருவருக்குமே ஆபத்து. அதன் வெளிப்பாடும் வலி உணர்வாகவே இருக்கும். எனவே, எந்தச் சூழலிலும், வலியை உதாசீனப்படுத்தக் கூடாது.;

தொற்றால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு, ஐ.என்.டி. வகை;அறுவைசிகிச்சைகள் அளிக்கப்படும். அந்த சிகிச்சைகள் முடிந்தபிறகு, அவர்கள் மீண்டும் தாய்ப்பால் கொடுக்க அறிவுறுத்தப்படுவார்கள். ஹெச்.ஐ.வி. இருப்பவர்கள் தவிர மற்ற அனைத்து தாய்மார்களும், தாய்ப்பால் கொடுக்கலாம். குழந்தைக்கு `லேக்டோஸ் இன்டாலெரென்ஸ்' (Lactose intolerance) என்ற பிரச்னை இருந்தால், தாய்ப்பால் கொடுக்கவேண்டாம் என அறிவுறுத்தப்படும். மற்ற அனைத்துக் குழந்தைக்கும், தாய்ப்பால் அவசியம்.;

பால் கொடுக்கும்போது சின்னச் சின்ன பிரச்னைகள் ஏற்படுவது இயல்புதான். அப்படியான சூழல்களில் சரியான மருத்துவ ஆலோசனையோடு அப்பிரச்னைகளுக்கான தீர்வை நோக்கி நகரவேண்டும்.;தாய்ப்பால் தருவதால்தான் வலி ஏற்படுகிறது என நினைத்துக்கொண்டு, அதை அப்படியே நிறுத்துவது மிகவும் தவறான செய்கை" என எச்சரிக்கிறார்.;Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/97844