#tamilbabychakra
#தமிழ்ப்புத்தாண்டு
தமிழ் புத்தாண்டு அன்று செய்யப்படும் சிறப்பு பச்சடி இது
இனிப்பும்,கசப்பும் சேர்த்தது.
மாங்காய் பச்சடி
மாங்காய் - 1
வெல்லம் - 1 கப்
உப்பு - 1 சிட்டிகை
ஏலப்பொடி - 1/4 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
வேப்பம்பூ - 1 டேபிள் ஸ்பூன்
தாளிக்க - எண்ணெய், கடுகு,காய்ந்த மிளகாய்.
○மாங்காயை சீவிக் கொள்ளவும்.
○அடுப்பில் வாணலியில் எண்ணை வைத்து கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, மாங்காய், உப்பு, கால் கப் தண்ணீர் விட்டு மிதமான தீயில் வேகவைக்கவும்.
○பிறகு வெல்லம் சேர்த்து கரைய விடவும்.
○நெய்யில் வேப்பம்பூவைப் பொன்னிறமாக வறுத்து, அடுப்பிலிருந்து இறக்கி, அந்த வாணலி சூட்டிற்கே ஓரளவு கருப்பாகும் வரை வைத்திருந்து பிறகு பச்சடியின் மேலே தூவவும்.
Recommended Articles
BabyChakra User
Yammy