அப்பா!
உன் கை பிடித்து நடத்தேனே
உன் சவ ஊர்வலத்தில் வருவதற்கா!
உன் மார்பினில் சுமந்தாயே
உன் இழப்பினை காண்பதற்கா!
எனக்கு கண்ணீர் வழிந்தாலே
உன் உதிரம் கசியுமே
இன்று எங்கேயோ நீ இருக்க
என் நெஞ்செல்லாம்
தீ பிடிக்க,
எப்போது காண்பேனோ உன்முகம்
நீதானே என் வாழ்கையின் அறிமுகம்.
இப்படிக்கு
உன் அன்பு மகள்
ரேவதி ராஜாமணி
Recommended Articles