விரதம் இருப்பது நல்லது என்ன காரணத்துக்காக எப்படி சொல்றாங்க?
ஒரு ஒருத்தர் ஒரு ஒரு மாதிரி விரதத்தை கடைபிடிப்பாங்க. சிலர் பழங்கள், தண்ணீர் சேர்த்திபாங்க சிலர் தண்ணீர் மட்டும் தான் விரத நாட்களில் குடிப்பாங்க. இப்படி விரதம் இருப்பதால் பல நன்மைகள் இருக்கு.
சீரண மண்டலத்திற்கு சில நேரம் ஓய்வு கொடுப்பதால் உங்கள் இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகி விடுகிறது. இதே போல வயிற்றையும் மாதத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்யனும். அதற்கு பேதி மாத்திரை சாப்பிட அவசியம் இல்லை😁 இதை செய்து பாருங்கள்.
செளவு ரசம்
தேவையான பொருட்கள்
1. கொத்து மல்லி விதை 3 ஸ்பூன்
2. சீரகம் 1 ஸ்பூன்
3. ஓமம் 1 ஸ்பூன் (விருப்பப்பட்டால் )
4. மிளகு 2 ஸ்பூன் (தேவையான அளவு)
5. பூண்டு 10 முத்து
6. தூதுவளை இலை(விருப்பப்பட்டால்)
7. சுக்கு சிரிதளவு
8. கொள்ளு 2 ஸ்பூன்
9. தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்
10. கருவேப்பிலை (தேவையான அளவு)
11. கடுகு
12. உப்பு (தேவையான அளவு)
செய்முறை
1. பாத்திரத்தில் சிரிது தேங்காய் எண்ணெய் விட்டு
2. சுடானவுடன் கொத்து மல்லி விதை, சிகரம், மிளகு, ஓமம், சுக்கு, தூதுவளை இலை நன்றாக வதக்கவும் ஒரு 2 நிமிடம் வரை
3. சுடு இரங்கியவுடன் பச்சை பூண்டை, கொள்ளு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
4. பாத்திரத்தில் சிரிது தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை சேர்த்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும்.
5. தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். செளவு ரசம் தயார்.
சளி இருமலுக்கு மருந்து இந்த செளவு ரசம், சில நேரத்தில் பேதி மருந்து.
எங்க பாட்டி என் அம்மாவுக்கு கொடுத்து
என் அம்மா எனக்கு கொடுத்து
நான் என் குழந்தைக்கு கொடுக்கிறேன். நீங்களும் இதை கொடுத்து பாருங்க. #momathon3
#coldremedy
#healthyfoodrecipe
#tamilbabychakra
Recommended Articles
BabyChakra User
Revauthi rajamani Rebecca Prakash priya dharshini pattu rampriya Suga Priya V narrayani raman Priya Hari Haran Gayathri Hemalatha Arunkumar raji varnika sundar திவ்யாஹரி ஹர்ஷித்