#foodrecipe வெறும் குழம்பு : என்ன அம்மாகளே அது என்ன வெறும் குழம்பு என்று யோசிகிறீர்களா? காய்கறி ஒன்றும் சேர்காத காரணத்தினால் இதன் பெயர் வெறும் குழம்பு, இது எனது மாமியார் வீட்டில் அடிகடி செய்யும் ஒன்று. தேவையான பொருட்கள்: புளி கரைத்தல் − 1 கப் மிளகாய் தூள் − 2 தேக்கறண்டி மல்லி தூள் − 4 தேக்கறண்டி வெங்காயம் − 1 தக்காளி − 1 பூண்டு − 5 − 6 வெந்தையம் − 1 சிறிய தேக்கறண்டி மஞ்சள் − சிறிது உப்பு − சிறிது எண்ணெய் - 2 to 3 தேக்கறண்டி செய்முறை: ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிடவும் அதில் வெந்தையம் மற்றும் பூண்டை சேர்த்து வதகவும். பிறகு அதில் வெங்காயம் , தக்காளி; சேர்த்து வதக்கவும். இதில் உப்பு, மஞ்சள், மிளகாய் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து மூடி வைத்து வதக்கவும். நன்கு வதங்கிய பின் அதில் புளி கரைத்ததை ஊற்றி கொதிக்க விடவும். எண்ணெய் பிறியும் வரை இந்த குழம்பை வதக்க வேண்டும். மிக சுவையாக இருக்கும், மசக்கையில் அவதிபடும் பெண்களுக்கு வாய்க்கு ருசியாக இருக்கும்.
Revauthi Rajamani
Like
Reply
09 Apr 2019