வார இறுதியில் காலை வணக்கம் வித்தியாசம். வேலைக்கு போகும் தாய்மார்களுக்கு குழந்தைகளோடு அளவளாடும் நாள் இது. வாரம் முழுவதும் நம்மோடு இரவு மட்டும் இருக்கும் நம் குழந்தைகள் இன்று நாள் முழுவதும் நம்மோடு என்பது, நமக்கு மட்டும் சந்தோஷம் தருவது அல்ல. நம்மில் வேலைக்கு போகும் தாய்மார்கள் மிக அதிகம். அவர்களில் குழந்தைகளை மற்றவரிடம் தான் அதிகம் ஒட்டி கொள்ளும் என்ற எண்ணம் கொண்டவர்கள் பலர். அதில் நானும் ஒருத்தி. அதற்கு ஏற்றாற்போல் பிள்ளைகளும் சில சமயங்களில் நடந்து கொள்வர். இந்த insecurity இல்லாதவர் மிக சிலரே. நீங்கள் நன்கு கவனித்து வந்தால், ஒன்றை உணர்வீர்கள். பிள்ளைகள் புத்திசாலிகள். இருப்பவர்களை கொண்டு சந்தோஷம் தேடுவர். இல்லாதவர் பற்றிய எண்ணம், கொஞ்ச நேரத்தில் போய் விடும். அதற்காக அவர்கள் நம்மை மறந்து விடுவதில்லை. நாம் இருந்தால் அவர்களுக்கு வரும் சந்தோஷத்திற்கு அளவில்லை. எனவே, குழந்தைகளை போல எதிலும் சந்தோஷம் காணும் ஒரு பக்குவம் நமக்கும் வர வேண்டும். அப்போதுதான் நாளை அவர்களை ஒரு தேர்விற்காக கடிந்து கொண்டு அவர்களை நோகடிக்கும் எண்ணம் நமக்கு வராது. இன்று ஒரு சாதாரண மாற்றம், உங்கள் வாழ்க்கையின் பார்வையே மாறும்! மாற்றுவோமே! #ப்ரீத்தியின்_பரிபாஷைகள் #bbcreatorslcub
@Revauthi Rajamani
27 Jul 2019
4
Likes
6
Comments
0
Shares
Sathya Kalaiselven
அருமை 👍
Like (1)
Reply
27 Jul 2019
Rebecca Prakash
#
Like
Reply
27 Jul 2019
Rebecca Prakash
Preethi Tamil la hashtag varadhu illa , so neenga English la hashtag vechu konga.
Sathya Kalaiselven
Like (1)
Reply
27 Jul 2019