Rewards
Q:

எனது குழந்தைக்கு இரண்டு வயது ஒன்பது மாதங்கள் ஆகின்றது.

நன்றாக பேசுவான்,

இரண்டு நாட்களாக மட்டும் பேசும்போது முதல் எழுத்தை திரும்பத் திரும்பச் சொல்லி திக்கி திக்கி பேசுகின்றான்.

உதாரணமாக பம்பரம் என்பதனை

ப ப ப பம்பரம் எடுத்துட்டு வாங்கப்பா என்கிறான்.

வாக்கியத்தின் முதல் வார்த்தை மட்டும் அவ்வாறு உச்சரிக்கின்றன்.

என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை

இரண்டு நாட்களுக்கு முன்பு கண்ணுக்கும் காதுக்கும் இடைப்பட்ட பகுதியின் மேல் தலைப்பகுதியில் அடிபட்டது கீழே விழுந்து அடிபட்டது. வீங்கியிருந்தது. கையினால் தேய்த்து விட்டபின் சரியானது. அடிபட்ட அதனால் இவ்வாறு இருக்குமோ என்று பயமாக இருக்கிறது.

எதனால் இவ்வாறு ஏற்பட்டது. நான் இப்போது என்ன செய்ய வேண்டும். உனக்குத் தெரிந்தால் எனக்கு தெரியப்படுத்தவும்.

நன்றி.