Rewards
Q:

வணக்கம், என்னுடைய குழந்தைக்கு 1 வருடம் 10 மாதம் ஆகிறது... அவன் திடீரென சாப்பிட மறுக்கிறான்.... பால் மட்டும் அருந்துகிறான்... குழந்தையை சாப்பிட வைக்க என்ன செய்யலாம் அல்லது பாலுடன் கலந்து குடுக்க ஹெல்த் டிரிங் ஏதாவது சொள்ளுகளேன்



குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?
○பசித்தால் அதைத் தாங்கிக் கொண்டு எந்தக் குழந்தையும் சாப்பிடாமல் இருக்காது.பசிக்கும் போது சாப்பிடட்டும்
○பல சமயங்களில் சத்தான உணவு வகைகள் குழந்தைகளுக்குப் பிடிக்காமல் போகலாம். அதற்காக அவற்றை ஒதுக்கிவிட வேண்டாம். மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கி / துறுவி அல்லது நன்றாக அரைத்து / மசித்து அவர்களுக்குப் பிடித்த உணவுடன் கலந்துவிடலாம்.
○குழந்தைக்கு சரியான இடைவேளையில் கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும்.
○குழந்தை இரண்டு வயது வந்த பிறகு உணவு ஊட்டுவதை தவிர்த்துக் கொள்ளவும்.
○குழந்தை சாப்பிடக்கூடிய அளவுக்கு மேல் ஒருபோதும் வைத்துத் திணிக்காதீர்கள்.
○காய்கறிகளை சாப்பிடவே மாட்டேன் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு காய்களை அப்படியே கொடுக்காமல், சப்பாத்து,இட்லி,தோசையில் சேர்த்து தரவும்.
○நிலா வடிவில் தோசை, ஸ்டார் வடிவில் தோசை,பூ ஷொப்பில் சப்பாத்தி செய்து தரலாம்.
○பால் மட்டுமே கொடுத்தால் பசி எடுக்காது, ஒரு வேளை பால் மட்டுமே போதுமானது.


Get the BabyChakra app
Ask an expert or a peer mom and find nearby childcare services on the go!
Phone
Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/question/280673