கர்ப்ப காலத்தில் ஏற்படும் பற்கள் சம்பந்தமான பிரச்சனைகள்

cover-image
கர்ப்ப காலத்தில் ஏற்படும் பற்கள் சம்பந்தமான பிரச்சனைகள்

கர்ப்ப காலத்தில் பொதுவாக சில நேரங்கில் பற்களில் சில பிரச்சனைகள் ஏற்படும், ஆகவே கர்ப்பமாக இருக்கும்போது பற்களைப் பாதுகாப்பதும் மிக முக்கிமானதாகும்! கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் பற்களில் உள்ள கிருமிகளை எதிர்கொள்வதில் உடல் திறம்பட செயல்படாது மற்றும் அது ஈறு மற்றும் பல் நோய்களை உருவாக்கும். இது கருவில் வளரும்  சிசுவின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

 

மேலும்... 

 

கருத்தரிக்கும் முன் பற்களின் ஆரோக்கியம்:

 

கருத்தரிக்கும் முன்பாக பற்கள் மற்றும் ஈறுகளை முறையாக ஆரோக்கியமாக  பராமரித்து வைத்திருப்பது மிக முக்கியம்.  ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு தடவை ஃப்ளோரைடு உள்ள பற்பசை கொண்டு பல் துலக்க வேண்டும், பற்களின் இடையே முறையாக சுத்தம் செய்தல் மற்றும் பல் மருத்தவரிடம் வழக்கமாக பரிசோதனைகள் செய்து பல் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்தக்கொள்ள வேண்டும்.

 

பிரச்சனைகள் ஏற்படுவதற்கான காரணங்கள்:

 

பற்களில் பிரச்சனைகள் வருவதற்கான சில பொதுவான காரணங்கள்:

 

ஈறு பிரச்சனைகள் 

 

இரண்டாவது மூன்றாம் கர்ப்ப பருவத்தில் ஈறுகளில் வீக்கம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு.  ஈறுகள் வீங்குதல் மற்றும் ஈறுகளில் இரத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் தெரியலாம், குறிப்பாக பல் துலக்கும்போதும் பல் இடுக்குகளை சுத்தம் செய்யும் போதும் இப்படி ஆகலாம். உடலின் ஹார்மோன் மாறுபாடுகளால் ஈறுகள் இப்படி பாதிப்படையலாம்.

 

தீர்வு: மிக மிருதுவான பல்குச்சிகளைப் பயன்படுத்துங்கள், ஃப்ளோரைடு உள்ள பற்பசை கொண்டு வழக்கமாக பல் துலக்குங்கள், கர்ப்ப காலத்தில் மற்றும் குழற்தை பிறந்த பின்பும் பல் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்யுங்கள்.

 

வாந்தி

 

கர்ப்ப காலங்களில் காலையில் ஏற்படும் வாந்தியால் வயிற்றின் செறிவான அமிலங்கள் பற்களின் மீது படிந்துவிடும். அடிக்கடி வரும் வாந்தியால் இப்படி அமிலங்கள் பற்களில் படிந்து பல் எனாமல் பாதிப்புக்குள்ளாகி பற்சிதைவு கூட ஏற்பட வாய்ப்புண்டு.

 

தீர்வு: வாந்தி எடுத்த உடன் பல் துலக்கக் கூடாது. சாதாரண நீரினால் வாயை நன்கு கழவிக் கொள்ளலாம். ஃப்ளோரைடு திரவத்தால் வாய் கொப்பளிக்கலாம் அல்லது ஃப்ளோரைடு உள்ள பற்பசை கொஞ்சம் கையில் எடுத்து பல் துலக்கலாம் (பல் குச்சியால் துலக்கக் கூடாது - அது பல் எனாமலை பாதிக்கும்). வாந்தி எடுத்த பின் 1 மணி நேரம் கழித்து பல்குச்சியால் பல் துலக்கலாம்.

 

இனிப்பு உணவுகளின் மீது ஆர்வம் 

 

இனிப்பு உணவுகளின் மீது நாட்டம் அதிகம் ஏற்பட்டு அத்தகைய உணவுகளை சாப்பிடுவதால் பற்சிதைவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

 

தீர்வு: குறைவான அளவு சர்க்கரை உள்ள உணவுகளை உண்ண வேண்டும். நல்ல ஆரோக்கியம் தரும் பழங்கள் அதிகமாக சாப்பிடலாம். இனிப்பான உணவு அல்லது நொறுக்குத்தீனிகள் சாப்பிட்ட உடன் ஒரு தடவை பல் துலக்கிக் கொள்ள வேண்டும்.

 

பல் துலக்கும்போது வாந்தி வருதல்

 

கர்ப்பமாக இருக்கும் சில பெண்களுக்கு பல் துலக்கும்போது வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும்.

தீர்வு: மெதுவாக பல் துலக்க வேண்டும், பற்பசையை மாற்றலாம், சிறிய தலையுள்ள பல்குச்சி பயன்படுத்தலாம், பல் துலக்கும்போது பிடித்த இசையைக் கேட்டுக்கொண்டு கவனத்தைத் திருப்பலாம்.

 

ஞாபகம் வையுங்கள் 

 

  • கால்சியம் மற்றும் வைட்டமீன் டி அளவை அதிகரியுங்கள்

கால்சியம் சரியான அளவு உடலில் இருந்தால்தான் எலும்புகள் உறுதியடையும் மற்றும் வளரும்  சிசுவிற்கும் ஊட்டம் கிடைக்கும். வைட்டமீன் டி உடலில் இருந்தால் தான் கால்சியம் உடலில் கிரகிக்கும். கால்சியம் அதிகம் உள்ள உணவுகளான பால், சீஸ், தயிர், பன்னீர்,  முட்டை, ஃபேட்டி மீன் போன்றவைகள உண்ணலாம். வைட்டமீன் டி மாத்திரைகளை மருத்துவரின் அறிவுரைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • முறையாக வாய் பராமரிப்பு செய்து வந்தால் கர்ப்ப கால பல் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
  • கருத்தரிக்கும் முன்பும் கருத்தரித்த பின் இரண்டாவது மூன்றாம் கர்ப்ப பருவத்திலும் பல் மருத்துவரை அணுகி சோதனை செய்யுங்கள்.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!