11 Oct 2018 | 1 min Read
Sonali Shivlani
Author | 213 Articles
பெரும்பாலான பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்வது பாதுகாப்பானதாகத்தான் இருக்கும். இருந்தாலும், உங்கள் மருத்துவரிடம் எந்தக் காரணங்களுக்காக எல்லாம் கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதைக் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு கர்ப்பமும் வேறுவிதமானது ஆகவே பாதுகாப்பாக எல்லா நிலைகளிலும் இருப்பது சிறந்தது.
கர்ப்பபையில் இருக்கும் சிசு மிக பாதுகாப்பாக அம்னியோடிக் திரவத்தால் சூழப்பட்டிருக்கும் மற்றும் வலிமையான கருப்பை சுவர் சாதாரண உடல் இயக்கங்களிலிருந்து சிசுவைக் காக்கும்.
இருந்தாலும், சில நேரங்களில் உடலுறவைத் தவிர்க்குமாறு உங்கள் மருத்துவர் அறிவுரை கூறலாம். நீங்கள் மருத்துவப் பரிசோதனைக்குப் போகும்போது உங்கள் கணவரையும் உடன் அழைத்துச் சென்று மருத்துவரிடம் பேசி நிலைமையை புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும்.
உடலுறவு தவிர்க்க வேண்டிய நேரங்கள்:
உங்கள் மருத்தவரிடம் எந்த சந்தேகங்களையும் கேட்கத் தயங்க வேண்டாம். நீங்கள் கேட்பதற்கு சௌகரியமாக உணரலாம் ஆனால் உங்களின் உடல் நிலையைப் புரிந்து கொள்வது மிக அவசியம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ளவை மட்டுமே உடலுறவு தவிர்க்க வேண்டுய நேரங்கள் இல்லை மற்ற மருத்துவ நிலைகளும் இருக்கலாம் அதை உங்கள் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் உடலுறவைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டால், உங்கள் கணவரை மற்ற வேறு வழிகளில் மகிழ்ச்சியடையச் செய்யலாம் அதாவது கட்டிப்பிடித்தல், காதல் சம்பாஷனைப் பேச்சுக்கள், மசாஜ் செய்தல் மற்றும் பல வழிகளில். மருத்துவர் அறிவுருத்தியிருந்தால் கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள் உச்சமடைதலைத் தவிர்க்க வேண்டும் மற்றும் முலைக்காம்பு தூண்டலில் கவனமாக இருக்க வேண்டும்.
எப்படி இன்பமடைந்து மகிழ்ச்சியாக இருப்பது என புதுமையாக யோசியுங்கள்!
A