கருவிலுள்ள சிசுவின் இயக்கம்: கருவிலுள்ள சிசுவின் இயக்கம் குறைந்தால் என்ன செய்வது. எது சாதாராணம் எது அசாதாரணம்

cover-image
கருவிலுள்ள சிசுவின் இயக்கம்: கருவிலுள்ள சிசுவின் இயக்கம் குறைந்தால் என்ன செய்வது. எது சாதாராணம் எது அசாதாரணம்

அறிமுகம் 


கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் பல அனுபங்களில் ஒரு சிலிர்ப்பான அனுபவம் என்பது கருப்பையில் சிசு நகரும்போதும் உதைக்கும் போதும் கிடைப்பது. சிசு முறையாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கான ஒரு சாட்சியம் தான் இந்த சிசு இயக்கம். சிசு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கான ஒரு அறிகுறியாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

 

பொதுவாக, இரண்டாம் மூன்றாம் கர்ப்ப பருவத்தில் சிசுவின் இயக்கத்தை தாய் உணர முடியும். ஆனால், ஒருவேளை அப்படி சிசு இயக்கத்தை உணர முடியாவிடில் அல்லது ஆரம்பத்தில் உணர்ந்து பின் இயக்கம் தற்போது இல்லாததாது போன்று உணர்வு ஏற்பட்டால், உடனே உங்கள் மகப்பேறு மருத்துவரை அணுகி கலந்தாலோசிப்பது நல்லது.

 

 


சிசு உதைப்பது எப்படி இருக்கும்?


பொதுவாக, கருப்பையில் சிசு நகர்வது ஒரு பட்டாம்பூச்சி உள்ளுக்குள் பறப்பதைப் போன்று ஒருவித படபடப்பு போன்று இருக்கும். முதல் கர்ப்பத்தில் ஆரம்ப கட்டங்களில், கருவில் உள்ள குழந்தை உதைக்கிறதா அல்லது நகர்கிறதா என்பதைத் தெளிவாக உணர முடியாது, வயிற்றில் அஜீரணம் ஏற்பட்டது போன்று இருக்கும். ஆனால், இரண்டாம் அல்லது மூன்றாவதாக கர்ப்பம் அடைந்தவர்கள் எளிதில் அறிந்து கொள்வார்கள்.


நீங்கள் முதன்முறையாக கர்ப்பமடைந்தவர் எனில், இரண்டாம் பருவத்தின் இறுதியில் அல்லது மூன்றாம் பருவ ஆரம்பத்தில் கருவில் உள்ள குழந்தை உதைப்பதையும் நகருவதையும் தனித்தனியாக பிரித்துணர முடியும்.

 

எந்த அளவு அடிக்கடி சிசு உதைப்பதை நான் உணர முடியும்?

ஆரம்ப கட்ட கர்ப்ப காலத்தில் எப்போதாவது ஒருதடவை சிசு நகர்வது அல்லது உதைப்பதை உணர முடியும். இரண்டாம் பருவத்தின் இறுதியில், சிசுவின் இயக்கம் அதிகமாகும் மற்றும் அடிக்கடி இயக்கத்தை உணர முடியும். மூன்றாம் கர்ப்ப பருவ கட்டத்தில் 1 மணி நேரத்தில் 30 தடவை வரை கூட சிசு இயக்கத்தை உணர முடியும் என சில ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.


அதேபோல், தாய் ஓய்வாக இருக்கும்போது கருப்பையில் குழந்தையின் இயக்கம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது இரவு நேரங்களில் மற்றும் உணவு உண்ட பின்னான நேரங்கில் இயக்கத்தை அதிகமாக உணரலாம். சில நேரங்களில் தாய் படபடப்பாக இருந்தாலும் வயிற்றில் குழந்தையின் இயக்கம் இருக்கும்.

 

இரண்டாம் மூன்றாம் பருவ காலகட்டங்களில் என்னமாதிரியான இயக்கத்தை நான் உணர்வேன்?

கர்ப்பகாலங்கள் வாரர வாரம் கடந்து செல்லும்போது, கருப்பையில் குழந்தையின் நகர்வு அதிகமாக இருப்பதை நீங்களும் அடிக்கடி உணர முடியும். ஒரு பொதுவான இயக்கநிலை, கீழே கொடுக்கப்பட்டுள்ளது:


12-15 வாரங்கள் – கருவில் உள்ள சிசுவின் முதல் இயக்கம் ஆரம்பிக்கும் காலம், ஆனால் இதை அவ்வளவாக உணர முடியாது
16-18 வாரங்கள் – குழந்தை நகர்வதை உணர முடியும், ஓரளவு சிசுவும் வளர்ந்திருக்கும். ஒரு பட்டாம் பூச்சி துடிப்பதைப் போல் ஒரு உணர்வு தெரியும்.
20-22 வாரங்கள் – இந்த காலகட்டத்தில், சிசு நன்றாகவே வளர்ந்திருக்கும் மற்றும் மிகத் தெளிவாக அடிக்கடி சிசு நகர்வதை உணர முடியும்.
24-28 வாரங்கள் – சிசு கர்ப்பபைக்குள் உருள்வது போன்ற உணர்வைப் பெறுவீர்கள்.
28-32 வாரங்கள் – அடிக்கடி சிசு நகரும் அங்கும் இங்கும் மற்றும் உதைப்பதையும் நீங்கள் உணர முடியும்.
34-38 வாரங்கள் – உங்கள் கர்ப்பபை மிகப் பெரிதாக ஆகியிருக்கும், சிசுவின் இயக்கம் சற்று தணிந்திருக்கும்.

 

 

 

சிசுவின் இயக்கத்தை எண்ணி வைக்கவேண்டுமா? குழந்தையின் இயக்கத்தை உணர முடியவில்லையாயின் என்ன செய்ய வேண்டும்?

 

உங்கள் குழந்தையின் இயக்கத்தை நீங்கள் உணர ஆரம்பித்துவிட்டால், எப்பொழுதெல்லாம் அல்லது எத்தனை தடவை அப்படியான நகர்வு உணர்வு உங்களுக்கு ஏற்பட்டது என்பதை குறித்து வைத்துக் கொள்வது நல்லது. அறிவியல் அடிப்படையில் குழந்தை இயக்கம் நன்றாக தெரிந்தால்தான் குழந்தை நன்கு வளர்ச்சியடைகிறது என்று அர்த்தம் இல்லை, ஆனாலும் இது ஒரு அடையாளமாகும். குழந்தை நன்கு வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு அறிகுறி அவ்வளவுதான்.

 

சிசுவின் இயகத்தை சரியான கவனித்து குறித்துக்  கொள்ள சிறந்த நேரம் தாய் ஓய்வெடுக்கும் நேரம் மற்றும் உணவு அருந்திய பின் உள்ள நேரம். 2 மணி நேரத்தில் கிட்டதட்ட 10-12 தடவை சிசு நகர்வை உணர முடியும் பொதுவாக. இந்த எண்ணிக்கை விட மிகக் குறைவாக இருப்பதாக உணர்ந்தாலோ அல்லது இயக்கமே இல்லாதது போன்று இருந்தாலோ உங்கள் மகப்பேறு மருத்துவரை அணுகி கலந்தாலோசிக்க வேண்டும்.

 

கருவில் உள்ள குழந்தை எப்போது சுறுசுறுப்பாக இயங்கும் எப்போது விழித்திருக்கும் என்பதை எல்லாாம் பொதுவாக கண்டறிவது எளிதானல்ல. சில நேரங்களில் எந்த அசைவும் இல்லாததாக இருந்தால் சிசு உறங்கிக் கொண்டும் இருக்கலாம். ஆகவே, 24 வாரங்கள் வரை சிசு இயக்கம் இல்லாதது சாதாரணம்தான். ஆனால், மொத்தமே சிசு இயங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லாதது போன்று உணர்ந்தால் உடனடியாக உங்கள் மகப்பேறு  மருத்துவரை அணுக வேண்டும்.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!