கர்ப்பகால உடலுறவு பற்றி கட்டுக்கதைகள்

cover-image
கர்ப்பகால உடலுறவு பற்றி கட்டுக்கதைகள்

கர்ப்பகால உடலுறவு பற்றி கட்டுக்கதைகள்

 

பெண்களே, கர்ப்பகாலத்தில் உடலுறவு பற்றி நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்!. முதல் மூன்று மாதத்தில் ஹார்மோன் மாற்றங்கள், வாந்தி, தலை சுற்றல் போன்ற பிரச்சனை எதிர்கொள்வதால் கண்டிப்பாக முதல் மூன்று மாதங்களில் உடலுறவு பற்றிய பேச்சுக்கே இடமில்லை. ஆனால், இரண்டாம் கர்ப்ப பருவத்தில், வாந்தி வருவது, தலை சுற்றல் போன்றவை குறைந்தவுடன் உடலுறவு எண்ணங்கள் வர ஆரம்பிக்கும்.

 

கர்ப்ப காலத்தில் ஆக்ஸிடோசின் ஹார்மோன் அதிகரிப்பால் உடலுறவு கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்கும். மேலும், அதிகமான ஈஸ்ட்ரோஜன் சுரப்பால் பெண்ணுறுப்பில் அதிகமான இரத்த ஓட்டம் இருக்கும். இது சாத்விக் அறிகுறி என்று பொதுவாக அழைக்கப்படும் – பெண்ணுறுப்பு மற்றும் க்ளிட்டோரிஸ் வீக்கம், அதிகமான வழுவழுப்பு ஆகியவற்றால் உடலுறவு வேட்கை அதிகரிக்கும்.

 

இப்பொழுதே வாங்கி 100% கேஷ் பேக் பெறுங்கள்!!

 

கர்ப்பகாலத்தில் உடலுறவு கொள்வதால் பிரசவ நேரத்தில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் என்று நீங்கள் கவலைப்படலாம். ஆனால் உங்கள் மருத்துவர் அப்படியெல்லாம் இல்லை என்று சொன்னால் என்ன செய்வீர்கள்? இன்னும் என்னை நம்பவில்லையா? இதோ கர்ப்பகால உடலுறவு சம்பந்தமாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ள சில விசயங்களை உடைத்து உண்மை என்ன என்பதைப் பார்ப்போம்.


நம்பிக்கை #1 பெண்ணுறுப்பினுள் ஆழமாக ஆணுறுப்பு செல்வது கருவைப் பாதிக்கும்…


உண்மை – கர்ப்பமாக இருக்கும் போது பெண்றுப்பு துளை நீளமாகும் மற்றும் ஆணுறுப்பிற்கும் கர்ப்பபை வாய்க்கும் இடையே இடைவெளி இயற்கையாகவே அதிகரிக்கும். மற்றும், கர்ப்பபை சுவர் தேவையான அளவு தடிமனாக இருக்கும் மற்றும் கர்ப்பபையில் கருவைச் சுற்றி அம்னியோடிக் திரவம் இருக்கும். எனவே, சிசு மிக பாதுகாப்பாக இருக்கும்.

 

நம்பிக்கை #2 கர்ப்பகால உடலுறவு பிரசவத்தைத் தூண்டும்

உண்மை – ஆமாம், கர்ப்பகால உடலுறவுககுப் பிறகு, விந்துவில் உள்ள ப்ரோஸ்டாக்லான்டின் என்னும் பொருள் சுருக்கத்தை ஏற்படுத்தும். பொதுவாக மருத்துவர்களும் இதே ப்ரோஸ்டாக்லான்டினைத்தான் மருந்தாகக் கொடுப்பார்கள் ஆனால் இதில் அதிக செறிவு இருக்கும்.

 

நம்பிக்கை #3 உடலுறவிற்குப் பிறகு இரத்தம் வருவது பாதிப்பிற்கான அறிகுறி.

 

உண்மை – உடலுறவிற்குப் பிறகு சிறிதளவு இரத்தம் வந்தால் அதைப்பற்றி பயம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் கர்ப்பபை வாய் மிக உணர்வுள்ளதாய் இருப்பதால். அதிகமான இரத்தம் ஒழுகினால் மருத்துவரை அணுக வேண்டும்.


நம்பிக்கை #4 கர்ப்பகால உடலுறவு பெண்ணுறுப்பில் தொற்று ஏற்படுத்தும்.

உண்மை – உங்கள் கணவருக்கு எந்த பால்வினை நோயும் இல்லையென்றால் உங்களுக்கும் எந்த தொற்றும் ஏற்படாது. பெண்ணுறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான்!


உண்மையில் கர்ப்பகால உடலுறவு பல பயன்களை அளிக்கும்:

 

இப்பொழுதே வாங்கி 35% தள்ளுபடி பெறவும்!

 


பெல்விக் தள தசைகளை வலுவாக்குகிறது
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகமாக்குகிறது
நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்
நல்ல தூக்கம் வரும்
கணவருக்கும் உங்களுக்கும் இடையே இன்னும் நெருக்கம் அதிகரிக்கும்.

 

கர்ப்பகாலத்தில் வழக்கமாக உடலுறவு வைத்துக் கொள்வதால் உங்கள் பெல்விக் தள தசைகள் வலிமையாகும் இது பிரசவத்தின் போது பிரசவத்தை எளிதாக்கும். உடலில் இரத்த ஓட்டத்தை அதிகமாக்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். உங்கள் கணவரோடு மேலும் நெருக்கமாக்கும் மற்றும் நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.

 

ஆகவே பெண்களே, கர்ப்பகால உடலுறவு பற்றி வெட்கப்பட வேண்டாம். உங்களுக்கு இது நல்லது!

 

பரிந்துரை: உங்களுக்கு மேலும் சந்தேகங்கள் இருந்தால் உங்கள் மகப்பேறு  மருத்துவரை அணுகி சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மருத்துவரின் ஆலோசனை மிக  முக்கியமானது.

 

logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!