கர்ப்பகால இரத்தப்போக்கு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

cover-image
கர்ப்பகால இரத்தப்போக்கு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

கர்ப்பமாக இருக்கும்போது பெண்ணுறுப்பில் இரத்தப்போக்கு ஏற்பட்டால் மிகவும் பயம் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனாலும், இரத்தப்போக்கோ அல்லது இரத்தக்கறை இருந்தாலோ அது கரு கலைந்துவிட்டது என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. கர்ப்பகாலத்தில் இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்களை இதோ இங்கு பார்ப்போம்.
கருத்தரிப்பு இரத்தப்போக்கு 

 

நீங்கள் கருத்தரித்த ஆரம்ப கட்டத்தில் இத்தகைய இரத்தப்போக்கு ஏற்படலாம், சில நேரங்களில் மிகக் குறைந்த அளவு இரத்தக்கறை நீங்கள் உணர முடியாத அளவு குறைவாக இருக்கும், இதை நீங்கள் மாதவிடாய் இரத்தப்போக்கு என்று கூட தவறாக நினைக்கலாம். இந்த இரத்தப்போக்கின் நிறம் வெளிர் சிவப்பு அல்லது ப்ரௌன் நிறத்தில் இருக்கும். இத்தகைய இரத்தப்போக்கு கருத்தரித்த ஆரம்ப நாட்களில் ஏற்படலாம். நீங்கள் மாதவிடாய் வரும் நாட்கள் என கருதும் நாட்களில் இது ஏற்படலாம் மற்றும் 6 முதல் 12 நாட்கள் வரை கூட இது இருக்கும்.

 


சோதனைக்குப்பிறகான இரத்தக் கறை 


சில நேரங்களில் பெண்ணுறுப்பினுள் ஏதாவது சோதனைகள் செய்த பின்  சிறிதளவு இரத்தக்கறை ஏற்பட வாய்ப்புண்டு அல்லது பாப் ஸ்மைர் சோதனை செய்த பின்னும் இத்தகைய இரத்தக்கறை ஏற்பட வாய்ப்புண்டு.

 


குறிப்பிட்ட காலவெளியில் இரத்தப்போக்கு


நீங்கள் கருத்தரித்த பின்பும் சிலபேருக்கு அவர்களின் மாதவிடாய் நாட்களை ஒட்டி 4, 8 மற்றும் 12 வது வாரத்தில் இரத்தப்போக்கு இருக்கும்.  முதுகுவலி, இடுப்பு எலும்பில் கனமாக இருப்பது போன்ற உணர்வும்  ஏற்படலாம்.


மேற்சொன்ன காரணங்களால் பிறப்புறுப்பில் இரத்தப்போக்கு ஏற்பட்டால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம் ஆனால் சில நேரங்களில் மற்ற ஆபத்தான காரணங்களினாலும் இரத்தப்போக்கு ஏற்படலாம்.

logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!