5 Feb 2019 | 1 min Read
revauthi rajamani
Author | 44 Articles
கர்பகாலத்தில் மசக்கை அல்லது வாந்தி வருவது இயல்பே.முதல் மூன்று மாதக்காலத்தில்வாந்தி,குமட்டல்,படபடப்பு ,அசதி,மயக்கம் ,பசியின்மை பெண்களுக்கு ஏற்படுவது மிகவும் இயற்கையான ஒன்று.எனினும் சில சமயங்களில் அது மிகவும் சிரமமான ஒரு விஷயமாக இருக்கும்.இவை ஹார்மோன் மாற்றங்களினால் ஏற்படும் பிரச்சனை.
*காலையில் எழுந்தவுடன் வெறும் வயற்றில் இருக்காமல் பிரட் அல்லது ரஸ்க் இதுபோன்ற பண்டங்களை உண்டால் பிரட்டலை கட்டுப்படுத்தலாம்.
*இந்தக் காலத்தில் ஏற்படும் வாந்தியினால் திடமான உணவைச் சாப்பிடவே பிடிக்காது. நீண்ட இடைவேளையில் அதிக உணவு சாப்பிடுவதை தவிர்த்து,குறுகிய இடைவேளையில் கொஞ்சம் கொஞ்சமாக உணவினை உண்ண வேண்டும்.ஒரே நேரத்தில் அதிகம் உண்னக் கூடாது. அதிகம் உண்டால் பிரட்டும்.
*எப்போதும் தேவைப்பாடும் அளவு ஜூஸ்சோ தண்ணீரோ குடிக்கவேண்டும். கர்பகாலத்தில் நீர்சத்து அதிகம் தேவைப்படும்.
*வாந்தி வரும்போது சாப்பிடாமல், சிறிது நேரம் கழித்து அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகச் சுலபமாக, செரிமானம் ஆகக்கூடிய உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
*பழம், காய்கறி சாலட், சத்து மாவுக் கஞ்சி என்று அடிக்கடி சாப்பிடுகையில் கொஞ்சம் வாந்தி எடுத்தாலும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
*இஞ்சி டீ போட்டு குடிக்கலாம், அல்லது ஓமம் மற்றும் சீரகம் சேர்த்து தண்ணீரை கொதிக்க வைத்து வடிகட்டி இந்த நீரை பருகினால் குமட்டல் நீங்கும்.
*மேலும் பெருஞ்சீரகம், ஏலக்காய், இலவங்கப்பட்டை போன்றவற்றை வாயில் வைத்து மென்று தின்றால் பிரட்டல் நீங்கும்.
*குமட்டலை தூண்டும் வாசனையை கூடுமானவரை தவிர்க்கவும்.
*எண்ணெய் பதார்த்தங்கள், மற்றும் நோறுக்குத்தீனிகளை தவிர்ப்பது நல்லது. கூடுமானவரை வீட்டில் செய்த உணவினை உட்கொள்ள வேண்டுனம்.
*ஒரு எலுமிச்சம் பழத்தினை நுகர்வதால், உங்களுக்கு ஏற்படும் குமட்டல் உணர்வைக் குறைக்க முடியும். இது பழைய வீட்டு வைத்தியம் எனினும் இன்றும் மசக்கைக்கு உகந்தது.
*எலுமிச்சம் பழத்தினை பிழிந்து ஜூசில் சிறிததளவு உப்பு சேர்த்து குடிக்கலாம். பிரட்டலை தவிர்க்கலாம்.
*மிக முக்கியமான விஷயம் மனதை ஸ்ட்ரெஸ் இன்றி வைத்துக்கொள்ள வேண்டும்.
மிக அதிகமாக பிரட்டினாலோ, வாந்தி இருந்தாலோ டாக்டரிடம் சென்று மருந்து உட்கொள்ள வேண்டும். உடல் நிலை பாதிக்கப்படுவதாய் இருப்பின் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள்எடுப்பது அவசியம்
இந்த பதிவு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷார் செய்யவும். மீண்டும் ஒரு நல்ல பதிவுடன் உங்களை சந்ததிக்கிறேன்.
A
Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.