கருவுற உகந்த நேரம்

cover-image
கருவுற உகந்த நேரம்

எந்தெந்த நாட்களில் உடலுறவு வைத்திருந்தால், கருவுறுவதற்கு உகந்தது என்ற கேள்வி குழந்தை பேற்றை பெற நினைக்கும் பலர் மனதில் இருக்கலாம்.

 

ஒவ்வொரு 28-30 நாட்களுக்குள் உங்கள் மாதவிடாய் வருமானால் , 11வது நாள் முதல் 21 ஆம் நாள்  வரை கணவன் மனைவி இருவரும் இணைய சுமுகமான நேரம். இந்த நாட்களைப் பயன்படுத்திக் கொண்டால் கர்பம் தெறிக்க அதிக வாய்ப்பினை பெறுவீர்.

 

ஒவ்வொரு மாதமும், மாதவிடாய் தொடங்குவதற்கு, 14 நாட்கள் முன்னதாக, சினைப்பையிலிருந்து முட்டை வெளியேறும். அது 12 முதல் 24 மணி நேரமே உயிருடன் இருக்கும். ஆணின் விந்து 72 மணி நேரம் உயிருடன் இருக்கும். இந்த நாட்களில் உடலுறவை மேற்கொண்டால் கருவுற அதிகச் சாத்தியக்கூறு உள்ளது. மற்றும் டாக்டரிடம் சென்று போலிக் ஆசிட் மாத்திரை எடுத்துக் கொண்டால் மிக நல்லது.

 

மேலும், இன்று நவீன காலத்தில் ஓவுலேஷன் கிட் என்ற கருவி பல மருந்தகத்தில் கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தி கருவுற உகந்த நேரம் எது என்பதை துல்லியமாக கணிக்க முடிகிறது.

 

நாம் தினசரி வாழ்க்கையில் சில பழக்க வழக்கங்களை செயல் படுத்தினால்  நன்மைகள் பல. கீழே சில டிப்ஸ்

 

  • ஃபாஸ்ட் புட், ஜங்க் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்கவும்.
  • உடலிடயை சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.
  • குறைதபட்சம் தினமும் 30 முதல் 40 நிமிடம் வரை வாக்கிங் செல்ல வேண்டும்.
  • உடற்பயிற்சி மிக அவசியம்.
  • மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும்.
  • அரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.

 

மேலும், நீண்டநாள் மாதவிடாய் பிரச்னையோ,  ஸ்பெர்ம் எண்ணிக்கயில் பிரச்னையோ இருந்தால் டாக்டரிடம் சென்று சரியான சிகிச்சையை ஏடுத்துக்கொள்ள வேண்டும்.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!