27 Feb 2019 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
இரண்டாவது டிரைமிஸ்டெர் என்பது உடல் அமைப்பு மற்றும் ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் வகைப்படுத்தப்படுகின்றன. நீங்கள் சாதாரணமுறையில் கர்ப்பம் தரித்திருந்தால், இரண்டாவது டிரைமிஸ்டெரில் நீங்கள் உடலுறவை தவிர்க்க தேவையில்லை.
பாதுகாப்பான உடலுறவு கொள்வது எப்படி:
நீங்கள் எந்த சிக்கல்களும் இல்லாத சாதாரண முறையில் கர்ப்பம் தரித்திருந்தால், கர்ப்பத்தின் இரண்டாவது டிரைமிஸ்டெரில் உடலுறவு கொள்வது முற்றிலும் பாதுகாப்பானது. இரண்டாவது டிரைமிஸ்டெரில் உடலுறவு எந்த வகையிலும் கருவை பாதிக்காது எனினும், பின்வரும் சில சூழ்நிலைகளில் மருத்துவ ஆலோசனைகள் பெரும் வரை கர்ப்ப காலத்தில் உடலுறவு தவிர்க்கப்பட வேண்டும்:
3.கர்ப்ப காலத்தில் எந்த நேரத்திலும் அல்லது உடலுறவின் போதும் யோனியில் இரத்தப்போக்கு ஏற்பட்ட/ஏற்படும் அனுபவம் உங்களுக்கு இருந்தால்.
4.உடலுறவு போது நீங்கள் வலியை அனுபவித்து இருந்தால் உங்கள் மருத்துவரிடம் அதைப் பற்றி பேசுங்கள்.
உங்களுக்கு அதிகப்படியான / அழுகிய நாற்றம் உடைய வெள்ளைப்படுதல் இருந்தால், உங்கள் துணைவருக்கு எஸ்.டி.டி.க்கள் தொற்றுவது மற்றும் பரவுவதை தடுக்க பொருத்தமான மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
எப்பொழுதும் உங்கள் கர்ப்ப நிலையை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் மேலும் உடலுறவு போது மிகவும் தீவிரமாக இருக்க கூடாது. கர்ப்ப காலத்தில் உடலுறவு கொண்டிருக்கும்போது உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் மற்றும் உங்கள் துணைவர் கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள் மருத்துவரிடம் அனைத்து அசம்பாவிதத்தையும் தெரிவிக்கவும், உங்கள் மருத்துவர் உடலுறவு எதிராக உங்களுக்கு அறிவுறுத்தியிருந்தால் அதைத் தவிருங்கள்.
இரண்டாவது டிரைமிஸ்டெரில் உடலுறவு – தேனிலவு காலமாகும்.
இரண்டாவது டிரைமிஸ்டெர் தேனிலவு காலம் அல்லது பேபிமூன் காலம் என அறியப்படுகிறது. இந்த நிலையில் குமட்டல், சோர்வு மற்றும் வாந்தி போன்ற பெரும்பாலான அறிகுறிகள் இந்த காலக்கட்டத்தில் நீங்கிவிடுகின்றன. கர்ப்பத்தின் இரண்டாவது டிரைமிஸ்டெர் உங்கள் சுறுசுறுப்பு மற்றும் வீரியத்தை மீண்டும் கொண்டுவரும். கர்ப்ப காலத்தில் முதல் டிரைமிஸ்டெரில் பாலியல் விருப்பத்தை பெறாத பெண்கள் இரண்டாவது டிரைமிஸ்டெரில் உடலுறவை அனுபவிக்கலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன, அவற்றில் சில உங்கள் பாலியல் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.
*பெண்களின் மார்பகங்கள் இரண்டாவது டிரைமிஸ்டெரில் பெரிதாகின்றன, பெரும்பாலான பெண்கள் அவற்றை உவகையுடன் அனுபவிப்பார்கள். மற்ற சில பெண்கள் இந்த காலத்தில் மார்பகங்களை சங்கடமாக உணரலாம். அதிகமான திருப்தி மற்றும் மகிழ்ச்சிக்காக உங்களுக்கும் உங்களுடைய துணைவருக்கும் இடையேயான தொடர்பை திறந்த முறையில் வைத்துக் கொள்ளுங்கள்.
*இரண்டாவது டிரைமிஸ்டெரில் பிறப்புறுப்பு மண்டலத்திற்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும்போது பெண்களின் பாலியல் ஆசை அதிகரிக்கலாம்.
*இயற்கையான யோனி உயவுத்தன்மையில் அதிகரிப்பு இருப்பதால், உடலுறவு கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக மாறும்.
*இந்த காலத்தில் பெண்குறி மிகுந்த உணர்திறன் வாய்ந்ததாக இருக்கிறது மற்றும் அதிகரித்த உணர்திறன் மகிழ்ச்சியை அதிகரிக்கிறது.
* இரண்டாவது டிரைமிஸ்டெரில் உங்கள் வயிறு வளர்ந்து வருகிறது, ஆனால் அது தடங்கல் ஏற்படுத்தும் அளவுக்கு போதுமான அளவும் பெரிதாக இல்லை.
இடுப்புகளின் வடிவம் மாறுகிறது மற்றும் அவை உடலுறவின் போது மேலும் வட்டமாகி அதிகமான இணக்கம் மற்றும் நெருக்கத்தைக் கொண்டு வருகின்றன. இரண்டாவது டிரைமிஸ்டெரில் உடலுறவை நன்கு அனுபவிக்கவும்!
A