• Home  /  
  • Learn  /  
  • தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவது அவசியம் மேலும் கர்ப்பத்தின்போது இரத்த பரிசோதனைகள் செய்வது அதற்கான வழிகளில் ஒன்றாகும்.
தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவது அவசியம் மேலும் கர்ப்பத்தின்போது இரத்த பரிசோதனைகள் செய்வது அதற்கான வழிகளில் ஒன்றாகும்.

தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவது அவசியம் மேலும் கர்ப்பத்தின்போது இரத்த பரிசோதனைகள் செய்வது அதற்கான வழிகளில் ஒன்றாகும்.

27 Feb 2019 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

கர்ப்ப காலத்தில், நீங்களோ உங்கள் குழந்தையோ சிக்கல்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் சில சூழ்நிலைகளை சந்திக்க நேரிடலாம். அதிர்ஷ்டவசமாக, கர்ப்ப காலத்தில்செய்யவேண்டிய பல இரத்த பரிசோதனைகள் உள்ளன, இவை முன்னமே இத்தகைய நிலைகளை கண்டறிந்து, சிக்கல்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கின்றது. இந்த சோதனைகள் கர்ப்பத்தின் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் பிரத்யேகமானவை. கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை நாம் இங்கே விவாதிக்கலாம்.

 

முதல் மூன்று மாதங்களில் ஸ்க்ரீனிங் இரத்த பரிசோதனை செய்வது

 

கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பரிந்துரைக்கப்படும்  வழக்கமான இரத்த பரிசோதனைகள் பின்வருமாறு:

 

  1. முழுமையான இரத்த எண்ணிக்கை (CBC)

 

சிபிசி என்பது மிகவும் அடிப்படையான கர்ப்ப இரத்த பரிசோதனை மற்றும் நம் இரத்தத்தை உருவாக்கும் பல்வேறு வகையான செல்களின் எண்ணிக்கை பற்றிய தகவலை அளிக்கிறது. இது பொதுவாக இரத்த சோகை, குறைந்த ஹீமோகுளோபினுடன் கூடிய ஒரு நிலைமையை கண்டறிய மேற்கொள்ளப்படுகிறது. இது வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை பரிசோதித்து நோய்த்தொற்றுகளுக்கு எதிராக உடலின் எதிர்ப்பு சக்தி பற்றிய தகவலை அளிக்கிறது மேலும் இரத்தக் வட்டுகளின் எண்ணிக்கையை பரிசோதிப்பதன் மூலம் இரத்தத்தின் உறைதல் குறைபாடுகளைக் கண்டறிகிறது.

 

  1. இரத்த வகைப்படுத்தல் (இரத்த தொகுத்தல்)

 

இரத்த சிவப்பணுக்களின் மேற்பரப்பில் இருக்கும் புரதம் Rh காரணி   என்று அழைக்கப்படுகிறது. இந்த Rh காரணி   ஒவ்வொரு நபரில்  இருக்கும் (Rh பாஸிடிவ்) அல்லது இருக்காது (Rh நெகடிவ்). ஒருவேளை நீங்கள் Rh நெகடிவ், மற்றும் உங்கள் குழந்தை Rh பாஸிடிவ் என்றால், அது இணக்கமற்றிருக்கும். தாயின் உடலால் Rh காரணிக்கு எதிரான ஆண்டிபாடிகள் குழந்தையின் இரத்த சிவப்பணுக்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது பொதுவாக முதல் கர்ப்பத்தை பாதிக்காது. எனினும், அது எதிர்காலத்தில் கர்ப்பமாகும்போது அந்த குழந்தைக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும் மற்றும் தவறாமல் சோதிக்கப்பட வேண்டும்.

 

      3. பாலியல் மூலம் பரவும் நோய்தொற்றுகள் (எஸ்டிஐ) மற்றும் மனிதனின் எதிர்ப்பாற்றல் குறைப்பு வைரஸ் (எச்..வி) சம்பந்தமான பரிசோதனைகள்

 

சிஃபிலிஸ் மற்றும் க்ளெமிடியா போன்ற பாலியல் மூலம் பரவும் நோய்கள் மற்றும் அக்கொயர்ட் இம்யுனோ டெஃபீசியன்சி சிண்ட்ரோம் (ஏய்ட்ஸ்) ஆகியவை கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பகாலத்தின் ஆரம்பகாலத்திலேயே சோதிக்கப்படவேண்டும், ஏனெனில் இந்த நோய்கள் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். கருவுற்றிருக்கும் தாய் எச்..வி. பாசிடிவாக  இருந்தால், தாய்க்கு சிகிச்சை அளிப்பதால் குழந்தைக்கு ஹெச் வி பரவும் வாய்ப்பினை சிறப்பாக தடுக்கலாம்.

 

  1. ரூபெல்லா, ஹெபடைடிஸ் பி மற்றும் ஹெபடைடிஸ் சி, மற்றும் காசநோய் (TB) ஆகியவற்றுக்கான சோதனைகள்.

 

கர்ப்பகாலத்தில் ருபெல்லா தொற்று பிறப்பு குறைபாடுகளை ஏற்படுத்தும், அதே சமயத்தில் ஹெபடைடிஸ் பி மற்றும் ஹெபடைடிஸ் சி வைரஸ்கள் கர்ப்பகாலத்தின்போது கருவுக்கும் பரவலாம். குழந்தைக்கான அபாயத்தை போதுமான சிகிச்சை மூலம் குறைக்க, கர்ப்பிணி பெண்களுக்கு இதற்கான பரிசோதனை செய்யப்பட வேண்டும். டி.பீ. ஏற்படும் அதிக ஆபத்துள்ள பெண்களுக்கும் டி.பீ.க்கான பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

 

சிறுநீர் கல்சர் மற்றும் சிறுநீர் பகுப்பாய்வு

 

இரத்த பரிசோதனைகள் தவிர, முதல் மூன்று மாதங்களில் ஸ்கிரீனிங் சோதனைகளில் சிறுநீர் கர்ப்ப பரிசோதனை, சிறுநீர் கல்சர் மற்றும் சிறுநீர் பகுப்பாய்வு ஆகியவை அடங்கும்.

 

  1. சிறுநீர் கர்ப்ப பரிசோதனைகள்:

 

பீட்டா சப்யூனிட் ஆஃப் ஹூமன் கோரையானிக் கொனொடோட்ராஃபின் (பீட்டாஹெச் சி ஜி) [Beta subunit of human chorionic gonadotropin (beta-HCG)] பொதுவாக இந்த சோதனையில் சரிபார்க்கப்படுகிறது மேலும் ஒரு வாரம் தள்ளிப்போன மாதவிடாய் பொதுவாக பாஸிடிவ் ஆகும்.  இது கர்ப்பத்தை உறுதிப்படுத்துகிறது.

 

  1. சிறுநீர் பகுப்பாய்வு:

 

உங்கள் சிறுநீர் பின்வருவனவற்றுக்கு சோதிக்கப்படலாம்:

  • சிறுநீர் பாதை தொற்று வராமல் காக்க சிவப்பு இரத்த அணுக்களின் இருப்பு
  • சிறுநீர் தொற்று வராமல் காக்க வெள்ளை இரத்த அணுக்கள்
  • நீரிழிவு நோய் வராமல் காக்க குளுக்கோஸ் இருப்பை கண்டறிய.
  • முன்சூல்வலிப்பு (preeclampsia) சாத்தியத்தை மதிப்பிடுவதற்கு ஆரம்பகட்ட கர்ப்பம் மற்றும் பிற்பகுதியில் புரத நிலைகள் ஒப்பிடப்படுகின்றன. ப்ரீக்ளாம்ப்ஸியா என்பது கர்ப்பத்தின் கடைசி அல்லது பிரசவத்திற்குப் பிறகு பொதுவாக ஏற்படும் ஒரு தீவிர சிக்கலாகும்.

 

  1. சிறுநீர் கல்சர்

சிறுநீரில் பாக்டீரியா இருப்பது ஒரு தொற்றுநோய் உள்ளதற்கான அறிகுறியாகும், இதற்கு சிகிச்சை தேவைப்படுகிறது.

 

1 வது மூன்றுமாத ஸ்கிரீனிங் சோதனைகள்

 

முதல் மூன்று மாதங்களின்போது எடுக்கப்படும் சோதனைகளில் ஒரு அல்ட்ராசவுண்ட் ஸ்கேணும் அடங்கும், இது 10 வாரங்கள் முதல் 13 வாரங்கள் வரை செய்யப்பட வேண்டும். இது உங்கள் எதிர்பார்க்கப்படும் பிரசவ தேதி, குழந்தைகளின் எண்ணிக்கை, அசாதாரணங்கள் ஏதும் இருப்பின் அதை கண்டறிய ஸ்கிரீனிங் சோதனையின் ஒரு பகுதியாக செயல்படுவதோடு சுருக்கமான கருத்தையும் வழங்குகிறது.

 

கர்ப்ப காலத்தில் கண்டறியும் இரத்த பரிசோதனை

 

குறிப்பிட்ட பிறப்பு குறைபாடுகளை கண்டறிவதற்கு கண்டறியும் சோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன. பிறப்பு குறைபாடு கொண்ட குடும்ப வரலாறு உங்களுக்கு இருந்தால், அல்லது நீங்கள் ஆபத்து விளைவிக்கும் இனக்குழுவைச் சேர்ந்தவராக இருந்தால், கண்டறியும் பரிசோதனை அதை சுட்டிக்காட்டலாம். இருப்பினும், இந்த சோதனைகள் சிலவற்றில் சில அபாயங்கள் உள்ளடங்குகின்றன, இதில் கருச்சிதைவு ஏற்படும் சிறிய அபாயமும் உள்ளது. எனவே, எல்லா கர்ப்பிணி பெண்களுக்கும் இது பரிந்துரைக்கப்படுவதில்லை. க்ரோனிக் வில்லஸ் சாம்ப்லிங் என்ற ஒரு சோதனையில் கருவில் உள்ள குரோமோசோம் சார்ந்த குறைபாடுகள் பற்றிய தகவல்களை கொடுக்க முடியும்.

 

கர்ப்பத்தின்போது இரத்த பரிசோதனைகள் தொந்தரவாக இருப்பினும், அவை உங்களுக்கும் உங்கள் குழந்தையின் நலனுக்காகவும் மட்டுமே. ஆரோக்கியமான கர்ப்பத்திற்காக இந்த மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றுவது சிறந்தது.

 

குறித்த பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரையில்  உள்ள தகவல் குறிப்பாகவோ அல்லது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சைக்கு ஒரு மாற்றாகவோ குறிக்கப்படவில்லை. எப்போதும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.

 

A

gallery
send-btn

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.