கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் உடலுறவு கொள்வது பாதுகாப்பானதா?

cover-image
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் உடலுறவு கொள்வது பாதுகாப்பானதா?

பல்வேறு கலாச்சாரங்களில் கர்ப்பகாலத்தின் போது உடலுறவு வைத்துக்கொள்வது என்பது வலுவான மற்றும் முரண்பாடான நம்பிக்கையை தூண்டுகிறது. கலாச்சார மற்றும் தனிப்பட்ட நம்பிக்கைகளைத் தவிர, கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது என்பது பெரும்பாலான பெண்களின் மனதில் கடைசியாக இருக்கிறது, ஏனெனில் அவர்கள் ஏற்கனவே குமட்டல், வாந்தி, சோர்வு, காலை நேர நலமின்மை மற்றும் பலவற்றைக் கையாளுகின்றனர்.

 

நான் கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளாமா?

 

பெரும்பாலான கர்ப்பங்களில், முதல் மூன்று மாதங்களில் கொள்ளும் உடலுறவு மருத்துவரீதயாக பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. எனினும், உங்களுக்கு கர்ப்ப காலத்தில் சிக்கல்களின் கடந்தகால வரலாற்றைக் கொண்டிருந்தால், நீங்கள் ஒரு மகப்பேறியல் மருத்துவரின் ஆலோசனையைப் பெறும் வரை நீங்கள் உடலுறவைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் கர்ப்பத்தை உறுதிப்படுத்த உங்கள் மாதவிடாய் நின்றவுடன் ஒரு மகளிர் மருத்துவ நிபுணரிடம் ஆலோசிக்கவும். சரியான கேஸ் ஹிஸ்டரியை தயாரித்து உடலுறவை நீங்கள் தவிர்க்க வேண்டுமா என உங்கள் மருத்துவர் ஆலோசனை கூறுவார். கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் ஹ்யூமன் கோரியோனிக் கோனாடோட்ரோபின் (HCG) அளவுகளில் விரைவான அதிகரிப்பு ஏற்படுகிறது. ஹ்யூமன் கோரியானிக் கோனாடோட்ரோபின் (HCG) குமட்டல் மற்றும் சோர்வுக்கான காரணியாகும். ஒவ்வொரு கர்ப்பமும் தனித்துவமானது, சில பெண்களுக்கு உடலுறவு என்பது அவர்கள் விரும்பும் கடைசி விஷயம், மற்றவர்களோ அதற்காக ஏங்கலாம்.

 

கர்ப்ப காலத்தின் எந்த நிலைகளில் உடலுறவு வைத்துக்கொள்ளக்கூடாது?

 

பெரும்பாலான குறைந்த ஆபத்து கொண்ட கர்ப்பங்களில்,  கர்ப்பகாலத்தின் போது உடலுறவு அனுமதிக்கப்படுவதோடு, அதனால் எந்த அபாயமும் ஏற்படப்போவதில்லை. ஆனால் பின்வரும் சிக்கல்களில் ஏதேனும் இருந்தால், உடலுறவைத் தவிர்க்க உங்களுக்கு அறிவுறுத்தப்படலாம்:

  • அச்சுறுத்தலால் கருக்கலைப்பு கொண்டிருந்தால்
  • கர்ப்பத்தில் இரத்தப்போக்கு இருந்தால்

மிகவும் சிரமேற்கொண்டு கருத்தரித்த அல்லது மோசமான மகப்பேறியல் வரலாற்றைப் கொண்ட பெண்கள், ஊடுருவும் உடலுறவில் அல்லது அவ்வாறு எப்போதாவது மட்டுமே ஈடுபடுகின்றனர். பல்வேறு ஆய்வுகள் ஊடுருவும் உடலுறவால் கர்ப்பம் கலையும் ஆபத்து அல்லது சாதாரண கர்ப்பத்தில் முன்னமே பிரசவிக்கும் ஆபத்தினை அதிகரிக்காது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

இது பாதுகாப்பனதா?

இளம் வயதில் பெற்றோராகப் போக இருக்கும் தம்பதிகளிடையே, கர்ப்பகாலத்தில் உடலுறவு கொள்வது பாதுகாப்பானதா என்ற கவலை இயல்பானதே. ஒரு சாதாரண கர்ப்பத்தின்போது, கருப்பையின் வலுவான தசையில் கரு பாதுகாக்கப்படுவதால், உடலுறவு கொள்வது உங்கள் குழந்தைக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்தாது. ஆண்குறி யோனிக்குள் மட்டுமே நுழையும் மற்றும் அதைத் தாண்டிச் செல்லாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், எனவே எந்த விதத்திலும் கருவினை இது பாதிக்க வழியில்லை. மேலும் கர்ப்பிணி பெண்கள் உச்சத்தை அடைவது பாதுகாப்பானதே. உச்சத்தை அடையும்போது ஏற்படும் சுருக்கத்தினால் கர்ப்பத்திற்கு எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாது.

 

மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

அதிக முறை இல்லை என்றாலும், மற்ற நேரத்தில் அனுபவிப்பதைப்போல் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் உடலுறவு கொண்டு திருப்தியடையலாம். பின்வருவனவற்றை மனதில் வைக்கவும்:

  • நிலைகள்: நீங்கள் இருவரும் வசதியாக இருக்கும் நிலைகளை தேர்ந்தெடுக்கவும். பெண்கள் மேலிருக்கும் நிலையில் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க அது உதவுவதால் பெண்களுக்கு அதிக வசதியான நிலையாக இது இருப்பதாக இது கவனிக்கப்படுகிறது.
  • யோனிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் எந்த ஒரு வெளிப்பொருட்களையோ யோனிக்குள் தினிப்பதை தவிர்க்கவும்.
  • யோனிக்குள் காற்று ஊதுவதை தவிர்க்கவும்.

 

உங்களுக்கு கர்ப்பகாலத்தில் இரத்தப்போக்கு ஏற்பட்டால், உடனடியாக உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.

 

குறித்த பொறுப்புத்துறப்பு:  இந்த கட்டுரையில் உள்ள தகவல் குறிப்பாகவோ அல்லது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சைக்கு ஒரு மாற்றாகவோ குறிக்கப்படவில்லை. எப்போதும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.

 

logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!