உங்களுக்குள் உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது: வாரம் 22

cover-image
உங்களுக்குள் உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது: வாரம் 22

இது வாரம் 22! உங்கள் வயிற்று வீக்கம் மற்றும் எடை குவிகிறது. இந்த வாரம் உங்கள் குழந்தையின் முகம் நிறைய வரையறுக்கப்படுகிறது. உங்கள் குழந்தை இப்போது கிட்டத்தட்ட 500 கிராம் எடை மற்றும் சுமார் 28 செ.மீ. நீளம், மற்றும் அம்சங்களை வரையறுக்க தொடங்கி உள்ளது. கண் இமைகள், புருவங்கள் மற்றும் உதடுகள் இன்னும் தனித்துவமான வடிவத்தை கொண்டிருக்கும். இப்போது, இறுதிகட்ட முடிவும் வளரும் தலைசிறந்த படைப்பின் விவரங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது.கண் இமைகள் இன்னும் மூடப்பட்டுள்ளது, ஆனால் உங்கள் குழந்தை வயிற்றில் ஒளி வீசினால் அசைகிறது. உடல் முழுவதும் ஆழமான சுருக்கங்கள் உள்ளன இது உங்கள் குழந்தையின் உடல் கொழுப்பு நிறைந்த பல அடுக்களுடன் இருப்பதால் இது மென்மையாக்கப்படும்.

உடல் மாற்றங்கள்: என்ன எதிர்பார்க்கலாம்

நீங்கள் உங்கள் கர்ப்பத்தில் முன்னேறும்போது உங்கள் தோல் பிரகாசிக்கும், உங்கள் தலைமுடி மிகவும் பளபளாக்கும், உங்கள் நகங்கள் வேகமாகவும் வலுவாகவும் வளரும். உங்களை உற்சாகப்படுத்த வெவ்வேறு தோற்றம் மற்றும் சிகை அலங்காரங்கள் கொண்ட தயாரிப்பையும் பரிசோதனையும் செய்யலாம்.மறுபுறம், உங்களுள் சிலர் நிறமினைக் கண்டறியலாம், நீட்டிப்பின் குறிகளை மறக்கக்கூடாது. நீட்டிப்பு அடையாளங்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பரம்பரையாக உள்ளன, மேலும் அவற்றைப் பற்றி செய்யக்கூடியவை மிகச் சிறிய அளவு உள்ளது. அவைகள் இரண்டாம் டிரைமிஸ்டெரில் தோன்றலாம் அல்லது கர்ப்பத்தின் கடைசி இரண்டு வாரங்களில் தோற்றமளிக்கலாம். அவற்றை முழுமையாக மறையச் செய்ய சில சிரமம் இருக்கலாம், ஆனால் அவை மறையும்.உங்கள் வயிறு, மார்பகம் மற்றும் பிட்டம் ஆகியவற்றை சிறிது வைட்டமின் ஈ- அடிப்படையிலான எண்ணெய் அல்லது லோஷன் கொண்டு  ஒரு நாளைக்கு இரண்டு முறை மசாஜ் செய்வது உங்கள் சருமத்தை மென்மையாக மற்றும் மிருதுவாக வைக்க உதவ முடியும்.

உங்கள் மார்பகங்களிலிருந்து ஒரு வெள்ளை மஞ்சள் திரவம் கசிவதை நீங்கள் காணலாம். இது கோலோஸ்டிரம் என்று அழைக்கப்படுகிறது மற்றும் முற்றிலும் சாதாரணமானது. இது உங்கள் உடல் தாய்ப்பால் உண்டு பண்ண தயாராக உள்ளது என்பதற்கான அடையாளம் .

வயிற்றுக்கு அப்பால்: உடல் வளர்ச்சி சில பெண்கள் இப்போது தான் சிறிது எடையைப் பெற்றிருக்கிறார்கள் என்பதால் அவர்கள் இன்னும் தங்கள் கர்ப்பத்தை மறைக்க முடியும். ஆனால் பெரும்பாலான மற்றவர்களுக்கு, இப்போது குழந்தைப் புடைப்பை மறைக்க கடினமாக இருக்கலாம்.

வளர்ந்து வரும் வயிறு உங்களுக்கு முதுகுவலி ஏற்படுத்தும் வாய்ப்புகளை உண்டாக்கலாம், எனவே உங்கள் கர்ப்பத்தின் நிலையைப் பற்றி கவனித்துக் கொள்ளுங்கள். முதுகு ஆதரவுடன் நிமிர்ந்து உட்காருங்கள் மற்றும் உணர்வுப்பூர்வமாக உங்கள் தோள்களை நேராக வைத்திருங்கள்.

மன விஷயங்கள்: உணர்ச்சி மேம்பாடு

நீங்கள் ஆச்சரியப்படக்கூடிய விசித்திரமான மற்றும் கொடூர கனவுகளை பெறலாம். பல உணர்ச்சிகள் உங்களைப் பின்தொடர்வதால் தெளிவான கர்ப்பக் கனவுகளைக் கொண்டிருப்பது மிகவும் சாதாரணமானதாக இருக்கும் என்று உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பாத கனவுகளால் அடிக்கடி விழித்தால், சில மென்மையான இசைகளைக் கேட்கவும் அல்லது தூங்குவதற்கு முன் ஒரு நல்ல புத்தகத்தை வாசிக்கவும்.

கண்கானிக்க: அதிகப்படியான எடை மற்றும் திரவ தக்கவைப்பு

மகப்பேறுக்கு முந்திய எடை அதிகரிப்பு அல்லது கர்ப்பம் எடை அம்மாவாகப் போகும் நபர்களுக்கு  இருக்கும் அக்கறைக்குரிய விஷயமாகும். நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதால் நீங்கள் எதையும், எல்லாவற்றையும் உண்ணலாம் என்று அர்த்தமில்லை. மகப்பேறுக்கு முந்திய எடை பின்னர் இழக்க மிகவும் கடினமாக இருக்கும், எனவே நீங்கள் மகிழ்ச்சியுடன் கூகி சாக்லேட் கேக் அல்லது வறுத்த கோழி சாப்பிடும் போது, நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் ஒரு கண் வைத்திருங்கள்.

எடையை சரிபார்க்க ஒரு நல்ல வழி உங்கள் விரல் மோதிரங்கள் உங்களுக்கு நன்கு பொருந்துகிறது என்பதை உறுதி செய்யவதாகும். உங்கள் மோதிரங்கள் இறுக்கமானதாக உணர்ந்தால், நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை கவரிக்க ஒரு குறிப்பை உருவாக்கவும்.வாரம் 22-ல் நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய மற்றொரு கவலையானது உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கப்பட வேண்டிய திரவம் தக்கவைப்பு ஆகும். உங்கள் மருத்துவரை நீங்கள் நான்கு வாரங்களுக்கு ஒருமுறை சந்தித்திக்கலாம் என்பதால், இந்த மாதிரியான சிறு சுய சோதனைகள் நீங்களும் குழந்தையும் நலம் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

எந்த வகையான முலைக்காம்பு தூண்டுதலையும் தவிர்க்க நீங்கள் ஒரு குறிப்பை உண்டாக்க வேண்டும். அதிகமான முலைக்காம்பு தூண்டல் ஹார்மோன் ஆக்ஸிடாசின் வெளியிடலாம், இது குறைப்பிரசவ சுருக்கங்களுக்கு வழிவகுக்கலாம்.

வயதான கிழவிகளின்' கதைகள்: வெறும் வேடிக்கைக்காக

ஒரு மிக பிரபலமான பழைய கிழவியின் கதை ஒரு தங்கச் சங்கிலி மற்றும் வைர மோதிரத்தை பயன்படுத்தி குழந்தையின் பாலினத்தை கணிப்பது. ஒரு வைர மோதிரத்தை கடந்து செல்லும் சங்கிலி குழந்தைப் புடைப்பு மீது கடக்கும் போது,  அது வட்டமாக அல்லது முன்னும் பின்னுமாக நகரும் என்று கூறப்படுகிறது. வட்டங்கள் ஒரு அன்பான மகள் (DD) வரப்போவதை குறிக்கும் மற்றும் முன்னும் பின்னுமான நகர்வு அன்பான மகனைக் (SO) குறிக்கிறது!

 

வேடிக்கைக்காக இந்த விளையாட்டை விளையாடுங்கள், ஆனால் சங்கிலி அசைவுக்கும் உங்கள் குழந்தையின் பாலினத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

 

logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!