கர்ப்பத்தின்போது சரியான தூங்கும் நிலை - கொஞ்சம் தூக்கத்தை பெற இந்த ஆலோசனையை ஏற்று நடக்கலாம்!

cover-image
கர்ப்பத்தின்போது சரியான தூங்கும் நிலை - கொஞ்சம் தூக்கத்தை பெற இந்த ஆலோசனையை ஏற்று நடக்கலாம்!

உங்கள் குழந்தை பெரிதாக வளரும் போது, நல்ல தூக்கத்தை பெற சரியான நிலையை கண்டிபிடிப்பது உங்களுக்கு கடினமாக இருக்கலாம்! முன்பக்கம் நீட்டி கொண்டிருக்கும் உங்கள் தொப்பை குறுக்கே வர துவங்குகிறது, எனவே, உங்கள் தொப்பையை கொண்டு தூங்குவது இனி ஒரு சாதாரன விருப்பம் இல்லை !

 

உங்கள் மனதில் உள்ளது எல்லாம் - வளர்ந்து வரும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்காமல், கர்ப்ப காலத்தில் வசதியாக தூங்குவதற்கு சிறந்த வழி இருக்கிறதா?

 

கர்ப்ப காலத்தில் தூங்குவதற்கான சிறந்த நிலை என்ன?

உங்களுக்கு பாதுகாப்பான மற்றும் சிறந்த தூக்க நிலை உங்கள் இடது பக்கத்தில் உள்ளது. இந்த நிலை, இரத்தத்தை அளிக்கின்ற நஞ்சுக்கொடிக்கு சரியான இரத்த ஓட்டம் மற்றும் உங்கள் குழந்தைக்கு ஊட்டச்சத்துக்களை உறுதி செய்கிறது. மேலும், இது உங்கள் கல்லீரலின் அழுத்தத்தை நிறுத்துகிறது. உங்கள் முழங்கால்களுக்கு இடையே ஒரு தலையணை, மற்றும் மற்றொன்ரு உங்கள் வயிற்றின் கீழும் வைத்துக் கொண்டு, உங்களது இடது பக்கத்தில் தூங்குங்கள்.

 

ஏன் உங்களது பின்புறம் அல்லது வலது பக்கத்தில் தூங்குவது ஆபத்தானது?

கர்ப்பிணி பெண்கள் தங்கள் பின்னால் அல்லது வலது பக்கத்தில் படுத்து உறங்கினால், இறந்தேபிறக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என ஆய்வுகள் சொல்கின்றன. உங்கள் முதுகில் படுத்து உறங்குவது, உங்கள் இதயத்திற்கு இரத்தத்தை அனுப்பும் மிக பெரிய நரம்பான தாழ்வான முற்புறப்பெருநாளத்தில், அதிக அழுத்தம் செலுத்துகிறது. வலது பக்கத்தில் படுத்து உறங்குவது, ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை உங்கள் இதயத்திலிருந்து மீதமுள்ள உடலுக்கு கொண்டு செல்லும் மிகப்பெரிய ரத்தக்குழாயான பெருநாடியில் அழுத்தம் செலுத்துகிறது. இதையொட்டி, குழந்தையை வளர்க்கும் நஞ்சுக்கொடிக்கு இரத்தத்தையும் ஊட்டச்சத்தையும் அளிப்பதை பாதிக்கலாம்.

 

கர்ப்ப காலத்தில் ஒரு நல்ல இரவு தூக்கத்திற்கான உதவிக்குறிப்புகள்:

சாப்பிட்ட பிறகு உடனடியாக படுத்துக்கொள்ளாதீர்கள். சாப்பிடுவது மற்றும் தூங்குவதற்கு இடையே ஒரு 2 மணி நேர இடைவெளி வைத்துக் கொள்ளவும்.

உங்களுக்கு நெஞ்செரிச்சல் போன்று ஒரு போக்கு இருந்தால், தூங்கும் போது உங்கள் கழுத்தின் கீழ் கூடுதல் தலையணையை வைத்து உங்கள் தலையை உயர்த்திக் கொள்ளவும் அல்லது செங்கற்கள் பயன்படுத்தி படுக்கையையே உயர்த்தி கொள்ளவும்.

நீங்கள் மூச்சு திணற்வது போல் உணர்தால், உங்களது பக்கத்தின் கீழ் ஒரு தலையணை வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் கர்ப்ப காலத்தில் பயன்படுத்தும் ஒரு தலையணையை வாங்கலாம், அது உங்கள் முதுகுக்கு ஆதரவளிக்கும்.

நீங்கள் புரண்டு பின்புறமாக திரும்பிவிட்டால் பயப்பட வேண்டாம். சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவதன் காரணமாக நீங்கள் தானாகவே விழித்துக் கொள்ளக்கூடும். உங்களால் எப்போது முடிகிறதோ, உங்களது நிலையை மாற்றிக் கொள்ளுங்கள்.

 

பட ஆதாரங்கள்: Mebscape, Webmd

மறுப்பு: இந்த தகவல் வல்லுனர்களால் பேபி சக்ரா பயனர்களுக்கு வழப்பட்டுள்ளது ..

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!