கர்ப்பமாக இருக்கும் உங்கள் மனைவியை ஆதரிக்க நீங்கள் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்

cover-image
கர்ப்பமாக இருக்கும் உங்கள் மனைவியை ஆதரிக்க நீங்கள் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்

சம்பந்தப்பட்ட மற்றும் அக்கறையுடைய கணவனாக இருப்பது உங்களுடைய கர்ப்பிணி மனைவியை ஆறுதல்படுத்துவது முக்கியம். சரி, நீங்கள் அவளுக்காக குழந்தையை சுமக்கவோ அல்லது அவளுக்காக சாப்பிடவோ, அல்லது அவள் சார்பாக கர்ப்பத்தின் அசௌகரியகங்களை  அனுபவிக்கவோ முடியாது! ஆனால் பக்கத்தில் இருந்து அவளுக்கு ஆதரவாக நீங்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன - இந்த சிறிய சிந்தனை மற்றும் அக்கறை, அவளது பயணத்தை எளிதாக்குவதில் மிக உதவியாக இருக்க முடியும்! உங்கள் கர்ப்பிணி மனைவியை எப்படி ஆதரிக்க வேண்டும் என்பதற்கான வழிகள் இங்கே உள்ளன.

 

  1. அவளிடம் பேசுங்கள்:

அவள் ஆர்வமாகவும், பயமாகவும் சோர்வாகவும் இருக்கக்கூடும் - அவள் விரும்பக் கூடிய  அனைத்தும் ஒரு கவனமாக பார்த்துக் கொள்ளும் ஒருவர் மற்றும் சாய்ந்து கொள்ள ஒருவர். அவளுக்காக கூடவே இருங்கள். இதேபோல், நீங்கள் பயந்தவராகவும், நீங்கள் ஒரு தந்தையாகப்  போகிறீர்கள் என்பதை உணர்ந்து கொண்டு உங்களையே சோதிக்கலாம். அவளிடம் பேசுங்கள், நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று அவளிடம் சொல்லுங்கள். நீங்கள் இருவரும் நன்றாக உணருவீர்கள், நீங்கள் இந்த ரோலர் கோஸ்டர் பயணத்தில் ஒருவருக்கொருவர் துணை இருப்பதை அறிவீர்கள். தகவல்தொடர்பு வார்த்தைகளை திறந்த மனதோடு வைத்திருங்கள் - அது எப்போதும் உதவும்!

 

  1. அவள் மனநிலை உற்சாகமற்று இருக்கலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்:

ஹார்மோன் மாற்றங்கள், சோர்வு, களைப்பு, மற்றும் ஒரு அசௌகரிய பொது உணர்வு, மற்றும் அவரது வாழ்க்கை திரும்பப் பெற முடியாத அளவுக்கு மாறிவிட்ட உணர்வு  - இவை அனைத்தும் இணைந்து அவர்களது கர்ப்ப காலத்தில் பல பெண்களை கவலையடையச் செய்கிறது. ஒரு நொடி அவள் சந்தோஷமாக இருக்கலாம், அடுத்த நொடி, அவள் அழலாம் - அவளால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அவள் அழுவதற்கு ஒரு தோள் மற்றும் ஒரு சுத்தமான கைக்குட்டை வழங்குவது!

 

  1. அவளது உணவு வெறுப்பு மற்றும் விருப்பங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்:

இன்று அவள் தோசையை மகிழ்ந்து உண்டால், நாளை அதன் வாசனை அவளுக்கு பிடிக்காமல் போகலாம். அவளுடைய விருப்பங்களில் அவளுக்கு ஆதரவாக இருக்கவும் மற்றும் அவற்றை புரிந்துகொள்ளவும்.

 

  1. மருத்துவர் வருகை மற்றும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்களுக்கு அவளுடன் சேர்ந்து செல்லவும்:

அது எப்போதுமே சாத்தியமற்றதாக இருக்காது, ஆனால் எப்போது முடிந்தாலும், அவளுடன் மாதாந்திர பரிசோதனைக்கு சேர்ந்து செல்லுங்கள். அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்களின் போது அவளது கையை பிடித்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தையின் இதய துடிப்பு கேட்கும் தருணத்தைப் பகிர்ந்துகொள்வது அல்லது திரையில் அதன் படத்தை பார்ப்பது மட்டுமல்லாமல் இந்த தருணங்களை நீங்கள் மீண்டும் பார்க்கும் போது பெரும் நினைவுகள் உருவாகும்!

 

  1. உங்களுக்கு நீங்கள் கற்றுதரவும்:

புத்தகங்களைப் படிக்கவும், கர்ப்பம் மற்றும் பிறப்பு பற்றி பேசும் வலைத்தளங்களை உலாவவும். கர்ப்பம் பற்றி எல்லாவற்றையும் அறிவதை நீங்கள் வேலையாகச் செய்தால், உங்கள் மனைவியுடன் கர்ப்பம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல் தெரிந்த முடிவுகளை எடுக்கலாம்.

 

  1. அவள் போதுமான ஊட்டச்சத்து பெறுவதை உறுதிப்படுத்தவும்:

எப்போதும் போதுமான பழங்கள், காய்கறிகள் மற்றும் கடலைகளை வீட்டிலேயே வைத்திருப்பதை உறுதி செய்யவும். அவள் இப்போது என்ன சாப்பிட விரும்புகிறாள் என்று தெரிந்துகொள்ளுங்கள், அவளுக்கு அது கிடைக்கும்படி செய்யுங்கள். அவள் தன் உணவு முறையை கண்காணிக்க மிகவும் சோர்வாக இருக்கலாம் - நீங்கள் அதை அவளுக்கு செய்ய முடிந்தால் அது நன்றாக இருக்கும்.

 

  1. அவள் ஓய்வெடுக்கலாம் மற்றும் உறங்கலாம்:

அது போல இல்லை என்றாலும், உங்கள் மனைவி ஓய்வெடுக்கையில் கூட அவளுடைய உடல் நிறைய வேலை செய்து வருகிறது. அதனால் அவளுக்கு நிறைய உறக்கம் தேவைப்படுகிறது. வேலைகளில் உங்கள் ஒதுக்கீட்டை அதிகரிக்கவும். அவளுக்கு இடைவேளை வழங்கவும். இருப்பினும், உங்கள் மனைவி வீட்டை சுற்றி எந்த வேலையையும் செய்ய கூடாது என்று அர்த்தம் இல்லை. கர்ப்ப காலத்தில் சுறுசுறுப்பாக இருப்பது ஒரு எளிமையான மகப்பேறுக்கு முக்கிய  ஒன்றாகும். ஆனால் அவள் முதல் டிரைமிஸ்டெரில் மிக விரைவாக சோர்வடையலாம், அதில் நீங்கள் நுழைந்தால் அது அவளுக்கு உதவியாக இருக்கும்.

 

  1. நெருக்கத்தை குறைக்க வேண்டாம்:

முதல் டிரைமிஸ்டெர் உடலுறவு கொள்வதற்கு மிகவும் உகந்ததல்ல. உங்கள் மனைவி மிகவும் சோர்வாக இருக்கலாம் மற்றும் / அல்லது நீங்கள் மிகவும் ஆர்வமாக இருக்கலாம்.  உங்கள் இருவருக்கும் இடையேயான சூழ்நிலை என்னவாக இருந்தாலும், அது உங்கள் அணைத்துக்கொள்வதையோ, அல்லது கட்டித்தழுவுவதையோ நிறுத்தக்கூடாது. நேசிப்பை உணர தொடுதல்  மிகவும் முக்கியம், எனவே முடிந்தவரை அவளை கட்டித்தழுவுங்கள். அவள் தனது உடலை மிகவும் வசதியாக இல்லமல் உணரலாம், அவள் மீது நீங்கள் ஏராளமான கவனம் செலுத்துவது அவளை நேசிப்பதற்கும் பாதுகாப்பாக உணரச் செய்யவும் உதவும்.

 

  1. அவள் உடற்பயிற்சி செய்ய உதவவும்:

மருத்துவரின் ஆலோசனைப்படி உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி செய்வது உங்கள் மனைவியின் ஆரோக்கியத்திற்கு முக்கியம். அவள் அதை செய்ய போதுமான உந்துதல் பெறவில்லை என்றால், நீங்கள் அவளை மெதுவாக உடன் செய்ய தூண்டலாம். ஒருங்கே உடற்பயிற்சி செய்வது எப்போதும் இனிமையானதாகும், மற்றும் அந்த வழியில் இன்னும் ஊக்கம் கிடைக்கும்!

 

  1. அவளது அனைத்து அழைப்புகளுக்கும் பதில் அளிக்கவும்:

இது அவசரமாக இருக்கலாம் - அல்லது அவசரம் இல்லாமலும் போகலாம்; அவள் உங்கள் குரல் கேட்க விரும்பலாம். எந்த விஷயமாக இருந்தாலும், அவளுடைய அனைத்து தொலைபேசி அழைப்புகளுக்கும் பதில் அளியுங்கள், அவளுடன் எப்போதும் தொடர்பில் இருங்கள்.

 

கர்ப்பம் என்பது வாழ்க்கையின் திருப்புமுனையாக உள்ளது. உங்களுடைய மனைவி கர்ப்பத்திற்கு முன்பு இருந்ததைப் போவே இப்போதும் இருக்கும்படி நீங்கள் எதிர்பார்க்க முடியாது. அவளுக்கு சாத்தியமான அனைத்து அன்பும் ஆதரவும் தேவை, அவளுக்கு அதை கொடுக்க சிறந்த நபர் நீங்கள் தான். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் அவளுக்கு எவ்வளவு ஆதரவு அழிக்கிறீர்களோ, அவள் அவ்வளவு மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் இருக்க முடியும்!

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!