கருவின் இதய துடிப்பு விகிதம்

கருவின் இதய துடிப்பு விகிதம்

8 Mar 2019 | 1 min Read

Komal

Author | 138 Articles

வாழ்க்கையின் முதன்மையான அடையாளங்களைக் கவனித்தல்

ஒரு இதய துடிப்பைத் தேடுதல்

நீங்கள் கர்ப்பமாக இருப்பதை நீங்கள் கண்டறிந்ததில் இருந்து, நீங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கின்ற ஒரே விஷயம் குழந்தையின் இதயத்துடிப்பின் சத்தம் கேட்பது தான். ஒவ்வொரு தாயாகப் போகும் பெண்ணுக்கும் இது மிகவும் உறுதியளிக்கும் ஒலி. இது கர்ப்பம் முழுவதும் அதே போல் சத்தம் கொண்டால் கூட, இதயம் மற்றும் இரத்த ஓட்ட அமைப்பில் ஏற்படும் பல மாற்றங்கள் உள்ளன.

 

கரு இதய துடிப்பு என்றால் என்ன?

 

ஒரு குழந்தையின் இதயத்துடிப்பை உருவாக்கும் ஒலி கரு இதய ஒலி என்று அறியப்படுகிறது. ஒரு நிமிடத்தில் பதிவு செய்யப்படும் கருவின் இதயத்தின் ஒலி எண்ணிக்கை கரு இதய துடிப்பு என அழைக்கப்படுகிறது. குழந்தையின் இதயச் சத்தம் ஒரு நிலையின் அல்லது கர்ப்ப நிலையின் குறிகாட்டிகளாக பயன்படுத்தப்படலாம் மற்றும் இது எந்தவித அசாதாரணங்களை சுட்டிக்காட்டவும் கூட பயன்படுத்தலாம். ஒரு சாதாரண ஆரோக்கியமான கர்ப்பத்தில் கரு இதய துடிப்பு நிமிடத்திற்கு 120 முதல் 160 துடிப்புகளுக்கு இடையில் உள்ளது.

 

இதயம் எப்போது துடிக்க ஆரம்பிக்கிறது?

 

 

மையோகார்டியம் என அறியப்படும் இதயத் தசை கருத்தரித்தலுக்குப் பிறகு தோராயமாக 3 வாரங்களில்  உருவாகும் என்று மருத்துவர்கள் அறிந்திருக்கிறார்கள். எனினும், இந்த கட்டத்தில் உருவாகிய இதய துடிப்பு ஒரு சோனோகிராம் மூலம் கேட்பதற்கு மிகவும் குறைவாக உள்ளது. 6 வார முடிவில், கருவின் இதய ஒலி  அல்ட்ராசவுண்ட் மூலம் தெளிவாகக் கேட்கப்படும். 9 முதல் 10 வாரங்களின் முடிவில், டாப்ளர் இயந்திரத்தில் கேட்பதற்கு குழந்தையின் இதய ஒலிகள் வலுவாக இருக்கும். கர்ப்ப வளர்ச்சிக்கு ஏற்ப குழந்தையின் இதய துடிப்பு அதிகரிக்கிறது.

இந்த அற்புதமான வீடியோவில் இரட்டையர்களைக் கொண்டிருக்கும் ஒரு தாயின் இதய ஒலியைக் கேளுங்கள்.

 

மூலம்: ஜெசிகா ஹாமில்டன்

 

மூலம்: Jessica hamilton

 

கரு இதய துடிப்பு பாலினத்தை கணிக்க முடியுமா?

 

இல்லை. இந்த பழைய கிழவிகளின் கதைகள் மறைய மறுக்கிறது. குழந்தையின் பாலினத்துக்கும் கரு இதய துடிப்புக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, இருப்பினும் அதை சுற்றியுள்ள பல தொன்மங்கள் உள்ளன. குழந்தையின் பாலினத்துக்கும் கரு இதய துடிப்புக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று அறிவியல் ஆய்வுகள் கூட நிரூபிக்கப்பட்டுள்ளன.

 

ஒரு குழந்தையின் இதய துடிப்பு எந்த ஒலியைப் போல் இருக்கும்?

 

மூலம்: health.mil

ஒரு குழந்தையின் இதய துடிப்பு ஒரு குதிரை விரையும் ஒலியைப் போல இருக்கும் என்று நீங்கள் பல தாய்மார்கள் கூறி கேட்டறிந்து இருக்கலாம். எனினும், நீங்கள் பேறுகாலத்திற்கு முந்திய  விஜயத்தின் போது நீங்கள் குழந்தையின் இதய ஒலிகளைக் கேட்கிறீர்கள் என்று உறுதி செய்ய வேண்டும். பெரும்பாலும், தொப்புள் துடிப்புகள் கரு இதய ஒலிகள் என்று தவறாக எண்ணக்கூடும். தொப்புள் துடிப்பு ஒரு ஷ்ஷ்ஷ் ஒலி செய்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஆனால் ஒரு டாப்ளரில் கேட்கப்படும் ஒரு குழந்தையின் இதய துடிப்பு ஒரு நிலையான குரல் ஒலி செய்யும் வகையில் தெளிவாக கேட்கப்படுகிறது.

 

இந்த வீடியோவில் ஒரு தாய் மற்றும் குழந்தையின் இதய ஒலி இடையே உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்ளுங்கள்.

 

 

மறுப்பு: கட்டுரையின் தகவலானது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சையளிப்பதற்காக ஒரு மாற்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கமோ அல்லது உட்படுத்தப்படவோ இல்லை. எப்போதும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைத் தேடுங்கள்.

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you