• Home  /  
  • Learn  /  
  • கர்ப்பத்தின்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்: எதை எதிர்பார்ப்பது
கர்ப்பத்தின்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்: எதை எதிர்பார்ப்பது

கர்ப்பத்தின்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்: எதை எதிர்பார்ப்பது

8 Mar 2019 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்பதை இப்போது தான் கண்டுபிடித்தீர்களா? நல்லது, நீங்களும் உங்கள் கணவரும் மேகத்தில் மிதப்பீர்கள்! சந்தேகமேயில்லை, இது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான நேரம் ஆனால் ஒரு விஷயம் பற்றி நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் சில அசௌகரியங்களை ஏற்படுத்தும் மேலும் கர்ப்ப கால முன்னேற்றமாக தினசரி நடவடிக்கைகளை கடினமாக்குறது.

 

ஆனால் பயப்படாதீர்கள். இந்த ஹார்மோன் மாற்றங்கள் எவ்வாறு உங்களை பாதிக்கின்றன என்பதைப் பற்றி தெரிந்துகொள்வதன் மூலம், நீங்கள் சிறப்பாக உங்களை தயார் செய்யலாம். என்ன எதிர்பார்ப்பது என்பதை அறிந்துகொள்வது, நீங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக உணரவைக்கும். நல்ல செய்தி என்னவென்றால் மாற்றங்கள் தற்காலிகமானவை, மற்றும் அசௌகரியம் ஏற்பட்ட போதிலும், இது உங்கள் வாழ்வில் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் உற்சாகமான காலத்தில் ஒன்றாக இருக்கும்.

 

கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக என்ன எதிர்பார்ப்பது என்பதை அறிந்து கொள்ள இதனை படியுங்கள்.

 

செரிமான பிரச்சினைகள்

சிறுநீரில் இருக்கும் ஹார்மோன் HCG, உங்கள் கர்ப்பத்தை அடையாளம் காட்டுகிறது. அதே ஹார்மோன் குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படுத்துகிறது, என்றாலும் இது நாளின் எந்த நேரத்திலும் ஏற்படலாம். உங்களுக்கு நெஞ்செரிச்சல், வாயு, மலச்சிக்கல் ஆகியவற்றின் பாதிப்பு உள்ளது என்றால், இது ஹார்மோன்கள் புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ரிலாக்சின் காரணமாக ஏற்படுகிறது, இவைகள் செரிமான அமைப்பின் தசைகளை ஓய்வெடுக்க வைக்கிறது. உங்கள் வெறுப்பை ஈஸ்ட்ரோஜென் அளவுகளை அதிகரிக்கும் சில உணவுகளில் குற்றம் சொல்லலாம்.

சிறிது சிறிதாக உணவுகளை உட்கொள்வது மற்றும் காரமான, வறுத்த உணவுகள் மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்களை தவிர்ப்பது, நிறைய திரவங்கள் குடிப்பது மேலும் உங்கள் உணவில் அதிக நார்ச்சத்து சேர்த்துக் கொள்வது, உங்களுக்கு உதவும்.

 

ஒளிரும் தோல் மற்றும் தடித்த முடி

கர்ப்ப காலத்தில் நீங்கள் எதிர்நோக்க வேண்டிய இரண்டு ஹார்மோன் மாற்றங்கள் உள்ளன. ஹார்மோன்கள் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஆகியவற்றின் செயல்பாடு மற்றும் அதிகரித்த இரத்த ஓட்டம் உங்களுக்கு புகழ்பெற்ற கர்ப்ப கால ஒளிர்வைத் தரும். உங்கள் தோல், மென்மையாகவும், சிவந்தும், மற்றும் பிரகாசமாகவும் தோன்றும் மேலும் உங்கள் முடி தடித்தும், பளபளப்பாகவும் இருக்கும்.

 

உணர்ச்சிமிக்கை சிறுநீர்ப்பை

கர்ப்பமாக இருப்பதில் மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்று எப்போதும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும். மீண்டும் அதற்கு காரணம் hCG, இது இடுப்பு எலும்பில் இரத்த ஓட்டத்தை  அதிகரிக்கிறது, அதுவே அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான காரணமாகும்.

 

மனநிலை அலைபாய்தல்

உங்கள் மனநிலை மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தில் இருந்து கவலை, எரிச்சல் மற்றும் கண்ணீராக வெகுவிரைவில் மாறலாம். இது உங்களையும், உங்கள் அருகில் இருப்பவர்கள் மற்றும் அன்பானவர்களையும் குழப்பம் அடைய செய்யும். கவலைப்பட வேண்டாம். இது மிகவும் சாதாரணமானது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களின் விளைவால் மனநிலையில் அத்தகைய அலைபாய்தல் ஏற்படுகிறது. அதிக அளவிலான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் நரம்பியப்பரிமாற்றிகளின் (மனநிலையை கட்டுப்படுத்தும் மூளை இரசாயனங்கள்) அளவுகளை பாதிக்கிறது.

 

மார்பக மாற்றங்கள்

உங்கள் மார்பகங்களில் புண், உணர்திறன் மற்றும் அளவில் அதிகரிக்கிறது. இதற்கு மீண்டும்  ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவு அதிகரிப்பதே காரணம் ஆகும்.

 

மூட்டுகள் மென்மைப்படுத்தல்

புரோஜெஸ்ட்டிரோன் தசைநாளங்களை தளர்த்துகிறது மற்றும் உடலில் உள்ள மூட்டுகளை மென்மையாக்குகிறது. இது கணுக்கால் மற்றும் முழங்காலை, விகாரங்கள் மற்றும் சுளுக்கால் எளிதில் பாதிப்படய செய்கிறது. இடுப்பு மண்டலத்தில் உள்ள மூட்டுகளின் மென்மையாக்குதல் கீழ் முதுகு வலி மற்றும் சமநிலையின் உணர்வை இழப்பதற்கு வழிவகுக்கும். கர்ப்ப காலத்தில் சுறுசுறுப்பாக  இருப்பது முக்கியம், அதனால் உடற்பயிற்சி செய்ய வேண்டும், ஆனால் கவனிப்புடன்.

நிலையான சோர்வு மற்றும் மயக்கம் பெரும்பாலான நேரம் சோர்வாகவும், மயக்கமாகவும் உணரலாம்.  இவை யாவும் புரோஜெஸ்ட்டிரோனின் பக்க விளைவுகள் மேலும் நீங்கள் கர்ப்ப காலத்தின் இரண்டாவது மூன்று மாதங்களுக்குள் நுழையும்போது இவை குறைந்து விடும். புரோலேக்டின், இது பாலூட்டலுக்கான மார்பக திசுக்களை உருவாக்குகிறது மேலும் ஒரு மயக்க விளைவைக் கொண்டிருக்கிறது.

 

நோய்த்தொற்றால் பாதிப்புக்குள்ளாகலாம்

நீங்கள் சுலபமாக நோய்வாய்ப்பட முடியும். ஏனென்றால், புரோஜெஸ்ட்டிரோன் வேண்டுமென்றே உங்கள் நோயெதிர்ப்பு முறையை ஒடுக்கிறது அதனால் உங்கள் உடல் சிசுவை நிராகரிக்காமல் இருக்கும் என்பதற்காக. கவனமாக இருங்கள், உடல் நிலை சரியில்லாத மக்களை சுற்றி இருக்க வேண்டாம்.

மாற்றங்களை ஏற்கவும் இறுதியாக, கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களைச் சமாளிக்க சிறந்த வழி அவைகளை ஒரு அத்தியாவசிய நிகழ்வாக ஏற்றுக்கொள்வது. இந்த ஹார்மோன்கள் உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு எப்படி உதவுகின்றன என்பதை நினைத்து பார்ப்பது உங்களை உற்சாகப்படுத்த சிறந்த வழி!

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you